AI தொழில்நுட்பம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் நிலையில், நாம் தெரிந்து வைத்திருப்பது மிகச்சில டூல்ஸ் மட்டுமே.. கற்றது கையளவு, கல்லாதது கடலளவு என்பது போல் நமக்கு தெரியாமல் இன்னும் ஏராளமான AI டூல்ஸ்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது. அந்த வகையில் நம் தளத்தில் ஒவ்வொரு வாரம் ஒரு டூல்ஸ் பற்றி காண்போம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்ப்பது Convergence Proxy AI. இதுகுறித்து விரிவாக தற்போது பார்ப்போம்.
Convergence Proxy AI என்பது இன்றைய டிஜிட்டல் உலகில் ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பமாகும். இது சாதாரண AI சாட்போட்கள் போல அல்லாமல், ஒரு மனிதனை போலவே இணையதளங்களை இயக்கும் திறன் கொண்டது.
இதன் முக்கியத்துவம் குறித்து தற்போது மிக எளிமையாக பார்ப்போம்.
பெரும்பாலான AI கருவிகள் தகவல்களை மட்டுமே தரும். ஆனால், இந்த பிராக்சி AI உங்களுக்காக இணையதளங்களில் Login செய்வது, படிவங்களை நிரப்புவது மற்றும் தரவுகளை தேடுவது போன்ற வேலைகளை தானாகவே செய்யும்.
2. Large Meta Learning Models – LMLM
இதன் இன்னொரு மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இது மனிதர்களை போலவே ஒரு வேலையை செய்ய கற்றுக் கொள்கிறது. ஒருமுறை நீங்கள் ஒரு பணியை செய்ய சொல்லி கொடுத்தால், அடுத்த முறை அது தானாகவே புத்திசாலித்தனமாக அந்த வேலையை செய்யும்.
3. API-Free Integration
பொதுவாக மென்பொருட்களை இணைக்க ‘API’ தேவைப்படும். ஆனால், இந்த AI கருவி நேரடியாக User Interface பார்த்து செயல்படுவதால், எந்தவித தொழில்நுட்ப சிக்கலும் இன்றி அனைத்து இணையதளங்களிலும் வேலை செய்யும்.
4. Time Saving & Productivity: தினசரி நாம் செய்யும் சலிப்பான வேலைகளான
மின்னஞ்சல்களை நிர்வகித்தல், சந்தை ஆராய்ச்சி , டேட்டா எண்ட்ரி போன்றவற்றை இது கவனித்து கொள்வதால், மனிதர்கள் முக்கியமான முடிவெடுக்கும் பணிகளில் கவனம் செலுத்த முடியும்.
5. Continuous Learning & Memory
இது Long-term memory கொண்டது. கடந்த காலங்களில் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, ஒவ்வொரு முறையும் தனது செயல்திறனை மேம்படுத்திக்கொண்டே இருக்கும்.
6. Security
நிறுவனங்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் இணக்க விதிகளை பின்பற்றி செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 2025-ல் Salesforce நிறுவனம் இதனை வாங்கியது இதன் நம்பகத்தன்மைக்கு ஒரு முக்கியச் சான்றாகும்.
மொத்தத்தில் கான்வெர்ஜென்ஸ் பிராக்சி AI என்பது வெறும் ஒரு கருவி மட்டுமல்ல, அது உங்கள் டிஜிட்டல் பணிகளை பகிர்ந்துகொள்ளும் ஒரு Virtual Assistant ஆகும்.
