சாப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் கோடிங் உலகில் தற்போது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வரும் Cursor என்னும் AI கோட் எடிட்டர் குறித்து தற்போது பார்ப்போம்.
ப்ரோக்ராமிங் செய்பவர்கள் மத்தியில் பல AI டூல்கள் புகழ் பெற்றிருந்தாலும், தற்போது Cursor ஒரு முக்கிய இடத்தை மிகவேகமாக பிடித்து வருகிறது. இது வெறும் ஒரு டெக்ஸ்ட் எடிட்டர் மட்டுமின்றி நம்முடைய முழு புராஜெக்டையும் புரிந்து கொண்டு செயல்படும் ஒரு திறமையான ஏஐ உதவியாளராகவும் நமக்கு பயன்படும்.
முதலில் கர்சர் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம். கர்சர் என்பது விஎஸ் கோடை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு AI-native கோட் எடிட்டர் ஆகும். விஎஸ் கோடில் நாம் பயன்படுத்தும் அனைத்து எக்ஸ்டென்ஷன்களும் இதிலும் வேலை செய்யும். ஆனால், இதன் தனிச்சிறப்பு என்னவென்றால், இதில் AI தொழில்நுட்பம் குறிப்பாக Claude 3.5 Sonnet மற்றும் GPT-4o) எடிட்டரோடு ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது.
சாதாரண AI கருவிகள் நாம் கொடுக்கும் ஒரு குறிப்பிட்ட ஃபைலை மட்டுமே பார்க்கும். ஆனால், Cursor நம்முடைய மொத்த புராஜெக்டையும் Index செய்து கொள்ளும்.
மேலும் நாம் ஒரு ஃபைலில் மாற்றம் செய்யும் போது, அந்த மாற்றம் மற்ற ஃபைல்களில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை Cursor முன்கூட்டியே கண்டுபிடித்து நமக்கு எச்சரிக்கை செய்யும். ஒரு குறிப்பிட்ட Function எங்கு வரையறுக்கப்பட்டுள்ளது, அது வேறு எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப கோடுகளை பரிந்துரை செய்யும்.
@ என்ற குறியீட்டை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட ஃபைல், போல்டர் அல்லது மொத்த கோட்-பேஸையும் ஏஐ-க்கு Reference வழங்கலாம். நாம் அடுத்து என்ன கோட் டைப் செய்யப்போகிறோம் என்பதை நம் கோடிங் ஸ்டைலை வைத்து இது சரியாக கணிக்கும்.
ஒரே நேரத்தில் பல ஃபைல்களில் மாற்றங்களை செய்ய சொல்லி ஏஐ-யிடம் கட்டளையிடலாம். உதாரணமாக, “புராஜெக்ட் முழுவதிலும் உள்ள லாகின் லாஜிக்கை மாற்று” என்றால், அது சம்பந்தப்பட்ட அனைத்து ஃபைல்களையும் தானாகவே திருத்தும்.
ஒரு புதிய புராஜெக்டை புரிந்து கொள்ள மணிக்கணக்கில் கோடுகளை வாசிக்க தேவையில்லை. கர்சரிடம் கேள்வி கேட்டால் போதும், அது உடனே நமக்கு தெளிவாக விளக்கும். அதுமட்டுமின்றி கோடில் தவறு ஏற்பட்டால், டெர்மினலில் ரும் எரர் மெசேஜை கர்சர் தானாகவே படித்து, அதை எப்படி சரி செய்வது என்பதையும் கோடிங் மூலமாகவே காட்டும்.
கர்சர் போன்ற கருவிகள் கோடிங் செய்வதை எளிதாக்குவது மட்டுமல்லாமல், ஒரு தனி நபர் ஒரு பெரிய நிறுவனத்தின் வேலையை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தந்துள்ளன. ஜூனியர் டெவலப்பர்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டியாகவும், சீனியர் டெவலப்பர்களுக்கு ஒரு வேகமான உதவியாளராகவும் இது திகழ்கிறது.
ஹலோ மாப்பிள்ளை.. எப்படி இருக்கீங்க? இனி செடி, கொடிகளும் பதில் சொல்லும்: AI-ன் அதிரடி ஆச்சரியம்!
