AI in Army: அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில ராணுவத்துக்கும் வந்துடுச்சு AI டெக்னாலஜி.. வருங்காலத்தில் போர்கள் ராணுவ வீரர்களால் நடக்காது.. AI தான் போரை நடத்தும்…!

AI in army


சமீப காலமாக கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில் AI மிகவும் முக்கியமானது என்பதும் மனிதனை மிஞ்சக்கூடிய அளவுக்கு சிந்திக்கும் திறன் கொண்ட AI டூல்ஸ் எல்லாம் வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இந்தியா உள்பட பல நாடுகளில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் AI ஆதிக்கம் தொடங்கிவிட்ட நிலையில் தற்போது ராணுவத்திலும் இந்த AI டெக்னாலஜியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் அதற்கான வழிமுறையை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


AI டெக்னாலஜி போர்க்களங்களின் முகவரியையே மாற்றி வரும் நிலையில், அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான ஒரு முக்கியமான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் சீனாவும் கையெழுத்திட மறுத்துள்ளன. ஸ்பெயினில் நடைபெற்ற REAIM உச்சிமாநாட்டில் இந்த விரிசல் வெளிப்படையாக தெரிந்தது.


இந்த உச்சிமாநாட்டில் 85 நாடுகள் பங்கேற்ற நிலையில், ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் நடக்கும் போரில் AI பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான 20 கொள்கைகள் அடங்கிய பிரகடனத்தில் வெறும் 35 நாடுகள் மட்டுமே கையெழுத்திட்டன. AI மூலம் இயங்கும் ஆயுதங்களின் மீது மனித கட்டுப்பாடு இருக்க வேண்டும், தெளிவான கட்டளை சங்கிலி இருக்க வேண்டும் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும்.


உலகின் மிகப்பெரிய ராணுவ சக்திகளான அமெரிக்காவும் சீனாவும் இந்த பிரகடனத்தில் கையெழுத்திடாமல் விலகி நின்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக நடைபெற்ற கூட்டங்களில் ஓரளவுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா, தற்போது பின்வாங்கியிருப்பது உலக நாடுகளிடையே உள்ள அரசியல் பதற்றத்தை காட்டுகிறது.


AI பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை விதித்தால், தங்களது எதிரி நாடுகள் தங்களை விட தொழில்நுட்பத்தில் முன்னேறிவிடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ளது. “ரஷ்யாவும் சீனாவும் AI டெக்னாலஜியை ராணுவத்தில் இணைப்பதில் மிக வேகமாக முன்னேறி வருகின்றன. எனவே இந்த இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளன.


AI தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருவதால் இதன் பயன் ஒருபக்கம் இருந்தாலும் சில ஆபத்துகளும் இதனால் ஏற்படுகிறது. விதிகளை விட தொழில்நுட்பம் வேகமாக வளர்வது உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்ற கவலை தற்போது மேலோங்கியுள்ளது. வல்லரசு நாடுகளின் இந்த இழுபறி, ராணுவ AI துறையில் ஒரு புதிய ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


 Google Vibe Coding : 5 பைசா செலவில்லாமல் ஒரு App செய்ய வேண்டுமா? கூகுளின் ‘வைப் கோடிங்’ உங்களுக்கு உதவும்.. கட்டண App பில்டர்களுக்கு ஆப்பு வைத்த கூகுள்..!