AI துறையில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆச்சரியம் நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதன் உச்சகட்டமாக, கூகுள் தற்போது தனது Google AI Studio-வில் Vibe Coding என்ற வசதியை கொண்டு வந்துள்ளது. பொதுவாக ஒரு App அல்லது வெப் App உருவாக்க வேண்டும் என்றால், அதற்கு சந்தா கட்டணம் , ஹோஸ்டிங் கட்டணம் என பல செலவுகள் இருக்கும். ஆனால், கூகுளின் இந்த தளம் ஒரு பைசா செலவில்லாமல் Appகளை உருவாக்க வழிவகை செய்கிறது.
‘வைப் கோடிங்’ என்பது நீங்கள் ஒரு புரோகிராமரை போல கோடிங் எழுதாமல், ஒரு நண்பரிடம் பேசுவது போல உங்கள் தேவையை சொல்வதாகும். “எனக்கு ஒரு ஜிம் ஒர்க்அவுட் பிளானர் ஆப் வேணும், அதில் கலோரி கவுண்ட் இருக்கணும், பார்க்க நீட்டா இருக்கணும்” என்று நீங்கள் ஒரு ‘வைப்’ கொடுத்தால் போதும், AI உடனே உங்களுக்காக முழு கோடிங்கையும் எழுதி Appஐ தயார் செய்துவிடும். இந்த தளம் மிகவும் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது:
கூகுள் ஏஐ ஸ்டுடியோவில் உள்ள பிராம்ப்ட் பாக்ஸில் உங்கள் ஐடியாவை டைப் செய்யுங்கள். நீங்கள் சொன்னதை வைத்து ஜெமினி ஏஐ, அதற்கான கோடிங் , டிசைன் மற்றும் டேட்டாபேஸ் அனைத்தையும் தானாகவே உருவாக்கும். App உருவான பிறகு, அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், “இந்த பட்டன் கலரை மாத்து” அல்லது “இன்னொரு பக்கத்தை சேர்க்கவும்” என்று சொன்னால் போதும், அது உடனே மாறிவிடும்.
App தயாரானதும், ‘Deploy’ கொடுத்தால் போதும், உங்களுக்கு ஒரு நேரடி லிங்க் கிடைக்கும். அதை யாருக்கு வேண்டுமானாலும் பகிரலாம். இது ஏன் மற்ற App பில்டர்களை விட சிறந்தது? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது
சந்தையில் உள்ள பெரும்பாலான No-code தளங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் பணம் கேட்கும். ஆனால் கூகுளின் இந்த சேவையில் மாதாந்திர கட்டணம் ஏதுமில்லை. டெக்னிக்கல் அறிவு இல்லாதவர்களும் App டெவலப்பர் ஆகலாம். வாரக்கணக்கில் ஆகும் வேலையை ஒரு சில நிமிடங்களில் முடித்துவிடலாம்.Appஐ எங்கே சேமிப்பது என்ற கவலை இல்லை, கூகுளின் இன்ப்ராஸ்ட்ரக்சரே அதை கவனித்து கொள்ளும்.
சிறு தொழில் செய்பவர்கள், மாணவர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் தொடங்குபவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். ஒரு ஐடியா வந்தவுடன் அதை உடனே ஒரு Appஆக மாற்றி சோதித்துப் பார்க்க இது மிகச்சிறந்த வழி. “கஷ்டப்பட்டு கோடிங் படிச்ச காலமெல்லாம் போயிடுச்சு, இப்போ கிடைச்சாலே App ரெடி பண்ணிடலாம்” என்பதே இன்றைய நிலை.
மொத்தத்தில் கூகுளின் இந்த வைப் கோடிங் தளம், சாப்ட்வேர் உருவாக்கத்தில் இருந்த பெரிய தடையை தகர்த்துள்ளது. இது மற்ற கட்டண App பில்டர்களை ஓரங்கட்டும் என்பதில் சந்தேகமில்லை. தொழில்நுட்பம் என்பது இனி ஒரு சிலருக்கானது மட்டுமல்ல, அது எல்லோருக்கானது என்பதை கூகுள் மீண்டும் நிரூபித்துள்ளது.\
