Prompting Guide 101: AI என்ற மந்திரக்கோல் கையில இருந்தா மட்டும் போதாது… அந்த மந்திரத்தை சொல்ல தெரியணும். கூகுள் கொடுத்திருக்கிறது அந்த மந்திரத்துக்கான Guide!

 

Prompting Guide 101


AI தொழில்நுட்பம் இன்று மனித குலத்திற்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், பெரும்பாலானோர் இதனை வெறும் கட்டுரை எழுதுவதற்கும், பாட்டு இயற்றுவதற்கும், ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுபிடிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். உண்மையில், AIயிடம் சரியான முறையில் Prompt கொடுத்து வேலை வாங்கினால், அதன் ரிசல்ட் வேற லெவலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், AIயிடம் எப்படித் திறமையாக வேலை வாங்க வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டியை கூகுள் தற்போது நமக்கு அளித்துள்ளது.


AI என்பது ஒரு மந்திரக்கோல் என்றால், அந்த மந்திரக்கோலை சரியாக சுழற்றத்தெரிந்தவர்கள் மட்டுமே அதன் முழு பலனையும் அனுபவிக்க முடியும். அந்த வித்தையைக் கற்றுத்தரவே கூகுள் 71 பக்கங்கள் கொண்ட Prompting Guide 101: A Quick Start Handbook for Effective Prompts” என்ற இலவச வழிகாட்டியை வெளியிட்டுள்ளது. AI கருவியிடம் நாம் கொடுக்கும் கட்டளைகள், அதாவது Prompt தான் மிகவும் முக்கியம். “நாம என்ன நினைக்கிறோம்னு அதுக்கு தெளிவா சொல்லணும், அப்பத்தான் அது நமக்கான வேலையைச் சரியா செய்யும்.”


ஒரு அனுபவம் உள்ள மனிதரிடம் ஒரு வேலையை சொன்னால், அவர் தனது அனுபவத்தை வைத்து அந்த வேலையை சரியாக செய்துவிடுவார். ஆனால்,AI யிடம் வேலை வாங்குவதற்கு அதற்கு புரியும் வகையில் தெளிவான Prompts சொல்வது அவசியம். முதலில் AI என்னவாக செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக, அது ஒரு ஆசிரியராகவா, மார்க்கெட்டிங் நிபுணராகவா அல்லது ஒரு மருத்துவராக செயல்பட வேண்டுமா என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.


அதன் பின்னர், AI என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். ஈமெயில் எழுத வேண்டுமா, கட்டுரை எழுத வேண்டுமா அல்லது ஒரு நீண்ட உரையை சுருக்க வேண்டுமா என்பதை சொல்ல வேண்டும். அதேபோல், சூழலுக்கு தகுந்தவாறு தேவையான பின்னணி தகவல்களைக் கொடுக்க வேண்டும். “இது ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் அனுப்ப வேண்டிய மெயில்” அல்லது “இது ஒரு பிசினஸ்மேனுக்கான ரிப்போர்ட்” என தெளிவாக குறிப்பிட்டால் மட்டுமே AIயால் துல்லியமான பதிலை வழங்க முடியும்.


மேலும், அந்த பதில் எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதையும் நாம் முடிவு செய்யலாம். அது அட்டவணை வடிவில் இருக்க வேண்டுமா அல்லது Paragraphs வடிவில் இருக்க வேண்டுமா என்பதை சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட நுணுக்கமான குறிப்புகள் அடங்கிய அம்சத்தைத்தான் கூகுள் தற்போது இலவசமாக வழங்கியுள்ளது.


மொத்தத்தில், கூகுளின் இந்த ‘பிராம்ப்டிங் கைட் 101’ என்பது ஒரு வெறும் பாடப்புத்தகம் அல்ல; இது வருங்கால வேலைவாய்ப்பு சந்தையில் வெற்றி பெறுவதற்கான ஒரு வழிகாட்டி. நீங்கள் ஒரு மாணவராகவோ, மேலாளராகவோ அல்லது ஒரு நிறுவனத்தின் உரிமையாளராகவோ இருக்கலாம், ஆனால் AIயிடம் திறமையாக பேச கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான தாரக மந்திரம். “டெக்னாலஜி வளர வளர நாமளும் அப்டேட் ஆகணும், அப்பத்தான் இந்த ரேஸ்ல நாம ஜெயிக்க முடியும்!”


Alexa+ இருந்தா வீட்ல நீங்க தனியா இருக்கீங்கன்னு அர்த்தம் இல்ல… உங்களை புரிஞ்சுக்க ஒரு நல்ல நண்பன் கூடவே இருக்கான்னு அர்த்தம்!