AI டெக்னாலஜி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே வரும் நிலையில் அவ்வப்போது புதுப்புது AI டூல்ஸ்கள் உருவாகி நம்முடைய வேலையை டோட்டலாக குறைத்து வருகிறது. குறிப்பாக ஒரு இணையதளம் உருவாக்க வேண்டும் என்றாலோ அல்லது ஒரு பிரசன்டேஷன் செய்ய பவர் பாயிண்ட் உருவாக்க வேண்டும் என்றாலோ மணிக்கணக்கில் நேரம் செலவில் செய்ய வேண்டும். ஆனால் தற்போது வந்துள்ள AI டூல்ஸ் ஒரு சில நிமிடங்களில் செய்து முடித்து விடுவதால் நம்முடைய நேரமும் பணமும் மிச்சம் ஆகிறது. அந்த வகையில் தற்போது பிரசன்டேஷன் மற்றும் இணையதளம் உருவாக்குவதற்கான முக்கிய AI டூல்ஸ் ஒன்றை பார்ப்போம்
நம்மிடம் ஒரு சிறப்பான ஐடியா இருக்கிறது, அதை உலகிற்கு அழகாக காட்ட விருப்பம். ஆனால், அதற்கான ஸ்லைடுகளை உருவாக்கவோ அல்லது இணையதளத்தை வடிவமைக்கவோ மணிநேரக்கணக்கில் செலவிட வேண்டியிருக்கிறது என்ற கவலையா? கவலையே வேண்டாம், நம் கற்பனை வேகத்திற்கு ஈடுகொடுக்க வந்துவிட்டது Gamma AI. கோடிங் அல்லது டிசைனிங் தெரியாமலேயே, சில நிமிடங்களில் பிரமிக்க வைக்கும் படைப்புகளை உருவாக்க இது வழிவகை செய்கிறது.
Gamma AI-ன் முக்கிய சிறப்பம்சங்கள்
அசத்தலான Presentations: பல மணிநேரம் மெனக்கெடாமல், நம் பிராண்டிற்கு ஏற்ற வண்ணங்கள் மற்றும் டிசைன்களுடன் அழகான ஸ்லைடுகளை சில நிமிடங்களில் Gamma AI உதவியால் உருவாக்கிவிடலாம். இதை அப்படியே PowerPoint அல்லது Google Slides போன்ற தளங்களுக்கு Export செய்து பயன்படுத்திக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
ஒரே நிமிடத்தில் Websites: வணிகத் தளங்கள் ,போர்ட்ஃபோலியோக்கள் அல்லது லேண்டிங் பேஜ்களை கண்ணிமைக்கும் நேரத்தில் உருவாக்கிவிடலாம். இதற்கு எந்தவிதமான கோடிங் அறிவும் தேவையில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு.
Social Media பதிவுகள்: சமூக வலைத்தளங்களுக்கான அழகான கிராபிக்ஸ் மற்றும் ஈர்க்கக்கூடிய பதிவுகளை உருவாக்கி, அவற்றை நேரடியாக பகிரும் வசதியை இது வழங்குகிறது.
Documents: பிசினஸ் ப்ரொபோசல்ஸ், பிடிஎஃப் மற்றும் காட்சி விளக்க படங்களை எந்த தலைப்பிலும் மின்னல் வேகத்தில் தயார் செய்யலாம்.
பாரம்பரிய மென்பொருட்களில் ஒவ்வொரு படத்தையும், எழுத்தையும் நாம் தான் தேடி எடுக்க வேண்டும். ஆனால் Gamma AI, உங்கள் யோசனைகளை மட்டும் பெற்றுக்கொண்டு, அதற்கு தேவையான டிசைன் வேலைகளை தானாகவே கவனித்துக்கொள்கிறது. இது உங்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, உங்கள் படைப்புகளை மிகவும் நேர்த்தியாகவும் மாற்றுகிறது.
