GPT-5.2: இந்த மாதம் வெளியான GPT-5.2.. மனுஷன் யோசிக்கிற நேரத்துல, இது வேலையையே முடிச்சிருக்கும்!

 

GPT-5.2

உலகமே தற்போது AI மயமாக மாறி வரும் சூழலில், இந்த துறையில் ஒரு மாபெரும் புரட்சியாகக் கருதப்படுவது GPT-5.2 ஆகும். OpenAI நிறுவனத்தால் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், முந்தைய பதிப்புகளை விட பல மடங்கு அதிகத் திறன் கொண்டதாகவும், மனிதனை போலவே சிந்திக்கும் ‘ரீசனிங்’ ஆற்றல் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்புகள் வெறும் தகவல்களை மட்டுமே வழங்கி வந்த நிலையில், GPT-5.2 ஒரு பிரச்சினையை தர்க்கரீதியாக அணுகி அதற்கான தீர்வுகளையும் வழங்குகிறது. உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் இதனை AI தொழில்நுட்பத்தின் அடுத்த முக்கிய பரிணாம வளர்ச்சி என்று புகழாரம் சூட்டி வருகின்றனர்.


இந்த GPT-5.2-ன் மிக முக்கியமான அம்சம் Multimodality என்பதாகும். அதாவது, இது ஒரே நேரத்தில் எழுத்துக்கள், புகைப்படங்கள், ஒலிகள் மற்றும் நேரடி வீடியோ காட்சிகளை கூட புரிந்துகொண்டு பதில் அளிக்கக்கூடிய வல்லமை பெற்றது. உதாரணமாக, ஒரு கேமராவை நேரலையில் காட்டி அங்கு நடக்கும் நிகழ்வுகளை விவரிக்க சொன்னாலோ அல்லது ஒரு வீடியோவை காட்டினாலோ, அது எங்கே நடக்கிறது, அந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன, அதில் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா என்பதை இது நொடியில் கண்டறியும். அதுமட்டுமின்றி, அந்த தவறுகளை சரி செய்யும் வழிமுறைகளையும் உடனுக்குடன் கூறி, மனிதர்களுடனான உரையாடலை மிகவும் இயல்பானதாகவும் நெருக்கமானதாகவும் மாற்றுகிறது.


இதன் Memory)வியக்கத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பயனர் பல மாதங்களுக்கு முன்பு பேசிய விஷயங்களை கூட ஞாபகப்படுத்தி பேசினால், அதனை சரியாக கிரகித்து சூழலுக்கு தகுந்த ஆலோசனைகளை இது வழங்குகிறது. ஒரு தனிப்பட்ட உதவியாளர் கூட செய்ய முடியாத பல வேலைகளை இது மிக எளிதாக செய்யும். குறிப்பாக, அலுவலக வேலைகளை திட்டமிட்டு செய்தல், மின்னஞ்சல்களை தானாகவே கையாளுதல் மற்றும் சிக்கலான தரவுகளை பகுப்பாய்வு செய்தல் போன்ற பணிகளில் மனிதர்களை விட வேகமாகவும் துல்லியமாகவும் இது செயல்படுகிறது.


கல்வித்துறையில் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை மிக ஆழமாக விவாதிக்கவும், கடினமான அறிவியல் கோட்பாடுகளை எளிதான உதாரணங்களுடன் புரிந்து கொள்ளவும் GPT-5.2 பேருதவியாக இருக்கிறது. அதேபோல், புரோகிராமிங் துறையில் இருப்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும். ஆயிரக்கணக்கான வரிகள் கொண்ட கோடிங்கில் உள்ள பிழைகளை சில நொடிகளில் கண்டறிந்து அவற்றை சரி செய்வது மட்டுமின்றி, அந்த தவறு எதனால் ஏற்பட்டது என்பதையும் இது விளக்குகிறது. இதனால் மென்பொருள் உருவாக்குநர்கள் அடுத்த முறை அதே தவறு நிகழாமல் தங்களை தற்காத்து கொள்ள முடிகிறது.


GPT-5.2 தற்போது Agentic AI என்ற உயர் நிலையை எட்டியுள்ளது. அதாவது, ஒரு இலக்கை இதனிடம் ஒப்படைத்தால், அந்த இலக்கை அடைய தேவையான அனைத்து வேலைகளையும் இதுவே சுயமாக சிந்தித்துத் திட்டமிட்டுச் செய்யும். உதாரணமாக, மதுரையிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் மட்டும் போதும்; அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்வது முதல், சென்னையில் எங்கே தங்க வேண்டும், எங்கே சாப்பிட வேண்டும் என்பது வரை அனைத்தையும் இதுவே திட்டமிட்டு தந்துவிடும். இது மனிதர்களின் தினசரி திட்டமிடல் சுமைகளை வெகுவாக குறைக்கிறது.


இவ்வளவு சக்திவாய்ந்த AI கருவியை பயன்படுத்தும் போது Data பாதுகாப்பு என்பது ஒரு சவாலான காரியமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஓபன்ஏஐ நிறுவனம் முந்தைய பதிப்புகளை விட இதில் மிக உயரிய பாதுகாப்பு அம்சங்களை இணைத்துள்ளது. பாதுகாப்பான தரவு மேலாண்மை மற்றும் நம்பகமான செயல்பாடுகள் மூலம் பயனர்களின் நம்பிக்கையை பெற இக்கருவி முயல்கிறது. 2026ம் ஆண்டின் இந்த புதிய வெளியீடு, மனித வாழ்வியலில் AI தொழில்நுட்பம் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

'AI For All: டெக்னாலஜிங்கிறது வசதி படைச்சவனுக்கு மட்டும் இல்ல... அது வறுமை கோட்டுக்கு கீழே இருக்கிற கடைசி மனுஷனுக்கும் போய் சேரணும். அதான் 'AI For All'... அதான் நம்ம மோடிஜியோட ஸ்டைல்!