Higgsfield AI: ஜூம் பண்ணணுமா, இல்ல ட்ரோன் ஷாட் வேணுமா? கேமராமேன் இல்லாமலேயே கேமரா சுத்தும்… Higgsfield AIல் மட்டும் தான் வேற லெவல் வீடியோ சாத்தியம்..!


Higgsfield AI


வளர்ந்து வரும் டெக்னாலஜி உலகில் ஒரு வீடியோவை உருவாக்குவது என்பது இன்று மிகவும் சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. முன்பெல்லாம் ஒரு தரமான வீடியோவை எடுக்க வேண்டும் என்றால் விலையுயர்ந்த கேமராக்கள், வெளிச்ச அமைப்புகள் மற்றும் திறமையான எடிட்டர்கள் தேவைப்பட்டனர். ஆனால், இன்று AI அனைத்தையும் மாற்றிவிட்டது. எந்த விதமான வீடியோ வேண்டும் என்ற ‘ஐடியா’ மட்டும் உங்களிடம் இருந்தால் போதும், ஒரு சினிமா தரத்திலான வீடியோவை மிக எளிதில் உருவாக்கிவிட முடியும். அந்த வகையில், வீடியோ உருவாக்கத்தில் புதிய மைல்கல்லாகத் திகழ்கிறது Higgsfield


இயக்குநர்களுக்கான சினிமாட்டிக் கண்ட்ரோல்


Higgsfield தளம் என்பது வெறும் வீடியோக்களை மட்டும் உருவாக்கும் கருவி அல்ல; இது ஒரு திரைப்பட இயக்குநருக்கு தேவையான முழுமையான ‘சினிமாட்டிக் கண்ட்ரோல்’ வசதிகளை வழங்குகிறது. இசை வீடியோ தயாரிப்பாளர்கள், விளம்பர நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதள படைப்பாளிகளுக்காகவே இது பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்டுடியோவில் அமர்ந்து காட்சிகளை வடிவமைப்பது போன்ற உணர்வை இது பயனர்ளுக்கு வழங்குகிறது.


கேமரா நகர்வுகளில் முழு அதிகாரம்


Higgsfieldன் மிக முக்கியமான சிறப்பு அம்சம் அதன் ‘கேமரா மோஷன்’ தொழில்நுட்பம் ஆகும். ஒரு காட்சியில் கேமரா எப்படி நகர வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். அதிரடியான ஜூம் காட்சிகள் , சீரான கேமரா நகர்வுகள் மற்றும் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டது போன்ற வான்வழி காட்சிகள் என அனைத்தையும் உங்கள் விருப்பப்படி இதில் அமைக்க முடியும். இது வீடியோவிற்கு ஒரு நிஜமான திரைப்பட தன்மையை கொடுக்கிறது.


துல்லியமான தரம் மற்றும் 4K காட்சிகள்


மற்ற ஏஐ வீடியோ மாடல்களை விட Higgsfield தளம் வீடியோ தரம் மற்றும் அசைவுகளின் துல்லியத்தில் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. 2026-ன் லேட்டஸ்ட் தொழில்நுட்பமான Kling 2.6 போன்றவற்றை இது ஒருங்கிணைத்துள்ளதால், பயனர்கள் 4K தரத்தில் மிக துல்லியமான வீடியோக்களை பெற முடியும். காட்சிகளில் ஏற்படும் சிறிய அசைவுகள் கூட சிதையாமல் மிக தெளிவாக இருப்பதே இதன் வெற்றியாக கருதப்படுகிறது.


கதாபாத்திர ஒருமைப்பாடு மற்றும் ஆடியோ வசதி


இந்த தளத்தில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் ‘கேரக்டர் கன்சிஸ்டன்சி’. ஒரு வீடியோ முழுவதிலும் அல்லது வெவ்வேறு காட்சிகளிலும் கதாபாத்திரங்களின் முகம் மாறாமல் ஒரே மாதிரியாக இருப்பதை இது உறுதி செய்கிறது. மேலும், புல்லட் டைம் முதல் ஹேண்ட் ஹெல்ட் ஷாட்ஸ் வரை பல ரெடிமேட் ஆப்ஷன்களும் இதில் உள்ளன. வீடியோவின் அசைவுகளுக்கு ஏற்ப ஆடியோ மற்றும் டயலாக்குகளையும் இணைக்கும் வசதி இருப்பதால், முழுமையான படைப்பை உருவாக்க முடியும்.


தனி மனிதனின் சினிமா ஸ்டுடியோ


சினிமா தரத்திலான வீடியோக்களை குறைந்த செலவிலும், மிகக் குறுகிய நேரத்திலும் எடுக்க விரும்புபவர்களுக்கு Higgsfield ஒரு வரப்பிரசாதம். ஒரு பெரிய கேமரா குழுவோ அல்லது தொழில்நுட்ப கலைஞர்களோ இல்லாமல், ஒரு தனி மனிதனாகவே தரமான விளம்பர படங்களையோ அல்லது குறும்படங்களையோ இதன் மூலம் உருவாக்கிவிடலாம். இத்தகைய வசதிகள் கொண்ட இந்த ஏஐ டூல்ஸை நீங்களும் பயன்படுத்திப் பார்த்து, உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள்!

ClickUp Brain AI: வெறும் டேஷ்போர்டு இல்ல… உங்க ஆபீஸ்ல இருக்கிற எல்லா வேலையையும் விரல் நுனியில கொண்டு வர்ற ‘டிஜிட்டல் மூளை’!