Hiro AI: நிதி மேலாண்மையில் ‘Hiro’ ஒரு ‘Hero’.. இதுமட்டும் உங்களிடம் இருந்தால் ஒரு ஃபைனான்சியல் அட்வைசர் கூட இருப்பது போல்..!


இன்றைய காலகட்டத்தில் முறையான பண மேலாண்மை என்பது வெறும் சிக்கனம் மட்டுமல்ல, அது ஒரு கலை. சரியான திட்டமிடல் இருந்தால் மட்டுமே நாம் விரும்பும் நிதி சுதந்திரத்தை அடைய முடியும். இதற்காகவே மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பம் இப்போது உங்கள் நிதி பயணத்தை எளிதாக்க வந்துள்ளது. மிக குறுகிய காலத்தில், எந்த கட்டணமுமின்றி உங்களுக்கான பிரத்யேக நிதி திட்டத்தை இப்போது நீங்களே தயார் செய்யலாம்.



மிக எளிதான வழிமுறை: நொடிகளில் நிதித் திட்டம்


பொருளாதார திட்டமிடல் என்றாலே எண்களோடும், கணக்குகளோடும் மல்யுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை. இந்தத் தளத்தில் உள்ள ‘Hiro’ எனும் AI உங்களோடு ஒரு நண்பனை போல உரையாடும். உங்கள் தேவைகளை கேட்டறிந்து, சில நிமிடங்களிலேயே ஒரு முழுமையான வரைபடத்தை உருவாக்கி தரும். இதில் மாற்றங்கள் செய்ய வேண்டுமானால், ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதுமானது.


2வாழ்வியல் மாற்றங்களைக் கணிக்க ‘Scenarios’


புதிய வீடு வாங்குவது, வேலை மாற்றம் அல்லது குடும்ப விரிவாக்கம் போன்ற பெரிய முடிவுகளை எடுக்கும்போது, அது உங்கள் சேமிப்பை பாதிக்குமா? இந்த தேடலுக்கு ‘Scenarios’ அம்சம் விடையளிக்கிறது. எதிர்கால சூழல்களை இப்போதே திரையில் ஒப்பிட்டுப் பார்த்து, எவ்வித தயக்கமுமின்றி தீர்க்கமான முடிவுகளை உங்களால் எடுக்க முடியும்.


சரிபார்க்கக்கூடிய துல்லியமான கணக்குகள்


இந்த AI வெறும் யூகங்களின் அடிப்படையில் இயங்குவதில்லை. இது நிதி சார்ந்த கணித தரவுகளில் நிபுணத்துவம் பெற்றது. உங்கள் திட்டத்திலுள்ள ஒவ்வொரு கணக்கீடும் எவ்வாறு பெறப்பட்டது என்பதை நீங்கள் வெளிப்படையாக ஆராயலாம். வெறும் பேச்சோடு நிற்காமல், புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உங்கள் நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது.


வருவாய் மற்றும் செலவு கண்காணிப்பு:


உங்கள் அன்றாட பண புழக்கத்தை மிக எளிதாக கண்காணிக்கலாம். வங்கிக் கணக்குகள், ஆவணங்கள் என அனைத்தையும் இணைத்து உங்கள் தற்போதைய நிதி நிலையை ஒரே பார்வையில் அறியலாம். நிதி தொடர்பான எந்தவொரு சந்தேகத்திற்கும் உடனடித் தீர்வுகளைப் பெறலாம்.


உங்கள் வருமானம், செலவு மற்றும் சேமிப்பு என அனைத்தையும் ஒருங்கினைத்து, ஒரு மேம்பட்ட வாழ்வாதாரத்தை உருவாக்குவதே இந்த AI கருவியின் இலக்கு. இன்று முதல் உங்கள் நிதிப் பயணத்தை நேர்த்தியாக தொடங்க இலவச பதிவை மேற்கொள்ளுங்கள் அல்லது அதன் செயல்முறை விளக்கத்தை நேரில் பாருங்கள்.


Chat Aid AI: எந்த ஃபைல் எங்க இருக்குன்னு இனி நீங்க தேட வேண்டாம்… நீங்க கேட்டா, அந்த ஃபைலை உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்தும் இந்த ‘Chat Aid AI’!