AI தொழில்நுட்பம் வருவதற்கு முன்பு வரை, ஒரு பாடலை உருவாக்க இசையமைப்பாளரிடம் சென்று நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு சில நொடிகளில் தரமான பாடல்களை உருவாக்கிவிட முடியும். அந்த வகையில், இசைக்காகவே உருவாக்கப்பட்ட AI கருவிகளில் SOUNDRAW மிகவும் குறிப்பிடத்தக்கது.
காப்புரிமை சிக்கலுக்கு முற்றுப்புள்ளி
வீடியோக்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் ஆல்பங்களுக்கு பின்னணி இசை தேவைப்படும்போது, Copyright சிக்கல் என்பது எப்போதும் ஒரு பெரிய சவாலாகவே இருக்கும். பிற கலைஞர்களின் இசையை நாம் பயன்படுத்தும்போது காப்புரிமை பிரச்சினைகளில் சிக்கினால், நமது வீடியோக்கள் முடக்கப்படலாம் அல்லது சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்படலாம்.
ஆனால், SOUNDRAW மூலம் உருவாக்கப்படும் இசைக்கு எந்தவித காப்புரிமை பிரச்சினையும் வராது. பெரும்பாலான ஏஐ தளங்கள் இணையத்தில் உள்ள மற்றவர்களின் பாடல்களை சிறிய அளவில் மாற்றி கொடுக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. ஆனால், SOUNDRAW தனது சொந்த இசை தயாரிப்பாளர்கள் உருவாக்கிய பாடல்களை கொண்டே தனது ஏஐ-க்கு பயிற்சி அளித்துள்ளது. இதனால் இதில் உருவாகும் இசைக்கு முழுமையான உரிமை உங்களுக்கே கிடைக்கும்.
எளிமையான இசை உருவாக்கம்
நீங்கள் ஒரு யூடியூப் கிரியேட்டராக இருந்தாலும் சரி, அல்லது பாடல்களுக்கு பின்னணி இசை தேவைப்படுபவராக இருந்தாலும் சரி, உங்களது பாடலுக்கு தேவையான ‘பீட்’களை உருவாக்க இதை தாராளமாகப் பயன்படுத்தலாம். மிக முக்கியமாக, எந்தவிதமான இசை மென்பொருளும் தெரியாமலேயே, இசையின் நீளம், வேகம் மற்றும் கருவிகளின் ஒலியை நீங்களே உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க முடியும். இது தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்களுக்கும் இசையமைப்பை எளிதாக்குகிறது.
புதிய ராகங்களின் சங்கமம்
இசையின் வெவ்வேறு ஜானர்களை ஒன்றாக இணைத்து இதுவரை யாரும் கேட்டிராத புதிய ராகங்களையும், மெட்டுக்களையும் இதன் மூலம் உருவாக்கலாம். இவ்வாறு உருவாக்கப்படும் பாடல்களை ஸ்பாடிஃபை , ஆப்பிள் மியூசிக் போன்ற சர்வதேச தளங்களில் பதிவேற்றலாம். அவ்வாறு பதிவேற்றப்படும் பாடல்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 100 சதவீதத்தையும் நீங்களே பெற்றுக்கொள்ளலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.
விலை மற்றும் பயன்பாடு
இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த SOUNDRAW தளம், மாதம் 5.99 டாலர் முதல் கிடைக்கிறது. கூடுதல் அம்சங்கள் தேவைப்படுபவர்கள் மாதம் 12.59 டாலர் மதிப்பிலான திட்டத்தைத் தேர்வு செய்யலாம். பிரெஞ்சு மொன்டானா போன்ற உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்களே தற்போது இந்த தளத்தை பயன்படுத்துகிறார்கள். இது வளரும் இசை கலைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
கலைஞர்களின் சிறந்த தேர்வு
காப்புரிமை அச்சமின்றி தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்த விரும்புவோருக்கு SOUNDRAW ஒரு சிறந்த தேர்வாகும். இசைத்துறையில் காலடி எடுத்து வைக்கும் புதியவர்களுக்கும், தொழில்முறை கலைஞர்களுக்கும் இது ஒரு டிஜிட்டல் மந்திரக்கோலாக செயல்படுகிறது. இசை உருவாக்கத்தில் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த விரும்புபவர்கள் தாராளமாக இந்த ஏஐ தளத்தை நாடலாம்.
