வீடியோ தயார் செய்ய ஏகப்பட்ட AI கருவிகள் வந்துவிட்டன என்பதையும், அவற்றில் சில டூல்ஸ்களை நாமே ஏற்கனவே பார்த்துள்ளோம் என்பதும் நமக்கு தெரியும். அந்த வகையில், AI மூலம் மிக எளிமையாக வீடியோ தயார் செய்யும் இன்னொரு அற்புதமான டூல் தான் Pictory AI. இன்றைய டிஜிட்டல் மற்றும் AI உலகில், வீடியோக்களை உருவாக்குவது என்பது ஒரு நிமிட வேலையாக மாறிவிட்ட நிலையில், Pictory AI வீடியோ கிரியேட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உருவெடுத்துள்ளது.
இது வெறும் வீடியோ எடிட்டர் மட்டுமல்ல
உங்களிடம் ஒரு ஸ்கிரிப்ட், ஒரு வலைப்பதிவு இணைப்பு அல்லது பவர் பாயிண்ட் கோப்பு இருந்தால் போதும்; உடனே அதை Pictory AI உயர்தர வீடியோவாக மாற்றிவிடும். இது வெறும் வீடியோ எடிட்டர் மட்டுமல்ல, ஒரு முழுமையான AI ஸ்டூடியோ’ என்று கூறினால் அது மிகையாகாது. ஏனெனில், உரைநடையில் உள்ள தகவல்களை அப்படியே வீடியோவாக மாற்றும் திறன் இதற்கு உண்டு. மேலும், நீண்ட வீடியோக்களை சுருக்கி சமூக வலைதளங்களுக்கு ஏற்ற வகையில் ‘ஷார்ட்ஸ்’ வீடியோக்களாகவும் இது மாற்றி தருகிறது.
அனிமேஷன் வீடியோக்களாக மாற்றலாம்
இதில் உள்ள AI Script Generator உங்கள் மேலோட்டமான ஐடியாக்களை ஒரு தொழில்முறை திரைக்கதையாக மாற்றி தரும். அதுமட்டுமின்றி, சாதாரண புகைப்படங்களை அனிமேஷன் வீடியோக்களாக மாற்றும் வசதிகளும் இதில் உண்டு. வீடியோவில் முகம் காட்ட வேண்டாம் என்று நினைப்பவர்களுக்காக இது ‘ஏஐ அவதார்களை’ அறிமுகம் செய்கிறது. கேமரா அல்லது மைக்ரோஃபோன் இன்றி, ஒரு செய்தி வாசிப்பாளர் போல உங்களது தகவல்களை இவை நேர்த்தியாக பேசி வழங்கும்.
பிடித்த டிசைன், இசை மற்றும் குரலை தேர்வு செய்யலாம்
Pictory AI யை பயன்படுத்துவது மிகவும் எளிது. முதலாவதாக, உங்கள் ஸ்கிரிப்ட் அல்லது லிங்கை இதில் பதிவு செய்ய வேண்டும். இரண்டாவதாக, AI தானாகவே அதை சிறு சிறு காட்சிகளாகப் பிரிக்கும். மூன்றாவதாக, உங்களுக்கு பிடித்த டிசைன், இசை மற்றும் குரலை தேர்வு செய்ய வேண்டும். நான்காவதாக, AI உங்களுக்கான வீடியோவை நொடிகளில் தயாரித்து கொடுக்கும். அதனை நீங்கள் சரிபார்த்து தேவையான ‘ஃபார்மேட்டில்’ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தவிதமான எடிட்டிங் அனுபவமும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனித்துவமான தோற்றம்
யூடியூபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மார்க்கெட்டிங் நிபுணர்களுக்கு இது ஒரு சிறந்த கருவியாகும். நீங்கள் ஒரு மார்க்கெட்டிங் செய்பவராக இருந்தால், உங்கள் பிராண்டுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்துடன் கூடிய வீடியோக்களை இது வழங்கும். பழைய கட்டுரைகளை மீண்டும் புத்தம் புதிய வீடியோக்களாக மாற்றவும், நீண்ட விளக்கப் படங்களை நொடியில் உருவாக்கவும் இது பெரிதும் உதவுகிறது.
நேரம் - உழைப்பு மிச்சம்
மொத்தத்தில், Pictory AI என்பது நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தும் ஒரு நவீன தொழில்நுட்பமாகும். விலையுயர்ந்த ஸ்டூடியோக்கள் இல்லாமலேயே தரமான வீடியோக்களை உருவாக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சரியான தளம். உங்கள் படைப்பாற்றலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இப்போதே Pictory AI-யை முயற்சி செய்து பாருங்கள்!
