AI தொழில்நுட்பமானது தற்போது வேலை செய்யும் முறையையே அடியோடு மாற்றி வருகிறது. நாள்கணக்கிலும், வாரக்கணக்கிலும் பார்த்த கடினமான வேலைகளை இன்று AI கருவிகள் ஒரு சில நிமிடங்களில் முடித்து விடுகின்றன. அந்த வகையில், மார்க்கெட்டிங் உலகை முற்றிலும் மாற்றியமைக்கும் பல கருவிகள் சந்தைக்கு வந்தாலும், Jasper AI ஒரு பிரத்யேக இடத்தை பிடித்துள்ளது. இது வெறும் கட்டுரைகளை மட்டும் எழுதும் கருவி அல்ல; மாறாக, மார்க்கெட்டிங் வியூகங்களை செயல்பாடுகளாக மாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட AI ஏஜெண்டுகளைத் தன்னுள் கொண்டுள்ளது.
ஜாஸ்பர் பிளாட்பார்மின் நான்கு முக்கிய தூண்களாகக் Canvas, Studio, Jasper IQ மற்றும் Trust ஆகியவை விளங்குகின்றன. Canvasஎன்பது மார்க்கெட்டிங் குழுக்கள் இணைந்து திட்டமிடவும் உள்ளடக்கத்தை உருவாக்கவும் உதவும் ஒரு களமாகும். Studio அம்சம், ஒரு நிறுவனத்தின் தேவைக்கேற்ப ஏஜென்டிக் பணிப்பாய்வுகளை மிக வேகமாக உருவாக்க உதவுகிறது. இது சாதாரண ஆட்டோமேஷனை தாண்டி, ஒரு புத்திசாலித்தனமான உதவியாளராக செயல்படுகிறது.
நிறுவனத்தின் தனித்துவத்தை பாதுகாப்பதில் Jasper IQ முக்கியப் பங்கு வகிக்கிறது. இது உங்கள் நிறுவனத்தின் பிரத்யேகமான ‘பிராண்ட் வாய்ஸ்’ மற்றும் கடந்த கால தரவுகளைக் கற்றுக்கொண்டு, வெளியாகும் உள்ளடக்கம் உங்கள் நிறுவனத்தின் பாணியிலேயே இருப்பதை உறுதி செய்கிறது. அதேபோல், Trust அம்சம் நிறுவனத்தின் ரகசிய தரவுகள் மற்றும் வாடிக்கையாளர் தகவல்களுக்கு உயர்தர பாதுகாப்பையும் தனிஉரிமையையும் வழங்குகிறது.
Jasper AI அனைத்து வகையான மார்க்கெட்டிங் பிரிவுகளுக்கும் மிகச்சிறந்த தீர்வுகளை வழங்குகிறது. குறிப்பாக, சமூக வலைதள விளம்பரங்களை உருவாக்கவும், SEO பதிவுகளைத் தயார் செய்யவும், PR செய்தி அறிக்கைகளை வடிவமைக்கவும் இது பேருதவியாக இருக்கிறது. Adidas போன்ற உலகளாவிய நிறுவனங்கள், வெறும் 24 மணி நேரத்தில் 7,500 தயாரிப்பு விவரங்களை Jasper AI மூலம் எழுதி சாதனை படைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Cushman & Wakefield போன்ற நிறுவனங்கள், Jasper AI உதவியால் ஆண்டுக்கு 10,000 மணி நேரத்திற்கும் மேலான மனித உழைப்பை சேமித்துள்ளன. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் டிஜிட்டல் துறைத் தலைவர், “இது வெறும் வேலை நேரத்தை குறைப்பது மட்டுமல்ல, மனிதர்களின் படைப்பாற்றலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதுடன், வாடிக்கையாளர்களுடனான தொடர்பை இன்னும் நெருக்கமாக்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், நீங்கள் ஒரு சிறிய ஸ்டார்ட்அப் குழுவாக இருந்தாலும் அல்லது ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமாக இருந்தாலும், உங்கள் மார்க்கெட்டிங் உற்பத்தியை அதிகரிக்கவும் விற்பனையை துரிதப்படுத்தவும் Jasper AI ஒரு மிகச்சிறந்த AI ஏஜெண்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. படைப்பாற்றலும் தொழில்நுட்பமும் இணையும் இந்த புதிய யுகத்தில், Jasper AI மார்க்கெட்டிங் நிபுணர்களின் வலதுகரமாக உருவெடுத்துள்ளது.
