Jaime AI : எல்லாரும் மீட்டிங்ல நோட்ஸ் எடுப்பாங்க… ஆனா Jaime AI மட்டும்தான் மீட்டிங்கையே ஒரு நோட்ஸா மாத்தும். 10 நிமிஷத்தில சம்மரி ரெடி..!

 

Jaime AI

ஒரு முக்கியமான மீட்டிங் நடக்கும்போது, அதில் பேசுபவர்களின் பேச்சை குறிப்பெடுப்பது என்பது மிகப்பெரிய சவாலான காரியம். எந்தவொரு சிறு தகவலையும் தவறவிட கூடாது என்ற பதற்றத்திலேயே பல நேரங்களில் நம்மால் மீட்டிங்கில் முழு கவனத்தையும் செலுத்த முடியாமல் போகிறது. ஆனால், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்று இது மிகவும் எளிதாகிவிட்டது. சந்தையில் பல கருவிகள் இருந்தாலும், அவற்றில் தனித்துவமான ஒன்றாக Jaime AI கருதப்படுகிறது.


பொதுவாக பல AI கருவிகள் ஒரு Bot போல மீட்டிங்கிற்குள் நுழைந்து, பேசுபவர் மற்றும் கேட்பவர்களின் கவனத்தை திசைதிருப்பும். ஆனால், Jaime AI எந்தவிதமான இடையூறும் இன்றி அமைதியாக பின்னணியில் இயங்கி, உரையாடல்களை துல்லியமாக பதிவு செய்யும். மீட்டிங்கின் போது தேவையற்ற பாப்-அப்களோ அல்லது தொந்தரவுகளோ இதில் இருக்காது. மீட்டிங் முடிந்த வெறும் பத்தே நிமிடங்களில், யார் யார் என்ன பேசினார்கள், என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன, அடுத்தகட்ட பணிகள் என்ன என்பதை தெளிவாகப் பட்டியலிட்டு மின்னல் வேகத்தில் நமக்கு வழங்கிவிடும்.


பாதுகாப்பை பொறுத்தவரை, இதில் உள்ள தரவுகள் ஒருபோதும் வெளியேறாது என்பதால் பயனர்கள் பயமின்றி இதனை பயன்படுத்தலாம். ஆங்கிலம் மட்டுமன்றி பல மொழிகளை துல்லியமாகப் புரிந்துகொள்ளும் திறன் இதற்கு உண்டு. கடினமான தொழில்நுட்ப வார்த்தைகளாக இருந்தாலும் கூட, அவற்றை சரியாகக் கண்டறிந்து குறித்து கொள்ளும். ஒரு மீட்டிங்கில் முழு கவனத்தையும் செலுத்த விரும்புபவர்களுக்கும், ஏஐ பாட்கள் உள்ளே நுழைவதை விரும்பாதவர்களுக்கும் இது ஒரு மிகச்சிறந்த தேர்வாகும்.


இருப்பினும், இதில் சில கவனிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளன. மீட்டிங் நடக்கும்போதே உடனுக்குடன் உரையாடலை எழுத்து வடிவில் பார்க்க விரும்புபவர்களுக்கு இது உதவாது; மீட்டிங் முழுவதுமாக முடிந்த பிறகே தகவல்களை தொகுத்து வழங்கும். மேலும், தற்போது இது டெஸ்க்டாப் பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது, மொபைல் ஆப் இன்னும் வரவில்லை என்பது ஒரு சிறிய பின்னடைவாக கருதப்படுகிறது.


விலையைப் பொறுத்தவரை, இதன் இலவச திட்டத்தில் மாதம் 10 மீட்டிங்குகள் வரை நாம் பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு மேல் தேவைப்படுபவர்கள், கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டண திட்டத்தைப் பெறலாம். இதன் அடிப்படைத் திட்டம் இந்திய மதிப்பில் மாதம் சுமார் ரூ.2,150 முதல் தொடங்குகிறது. மீட்டிங் டென்ஷனை குறைத்து, வேலையை எளிதாக்க விரும்பும் இன்றைய கார்ப்பரேட் உலகிற்கு Jaime AI ஒரு வரப்பிரசாதம்!


Motion AI.. இது வெறும் டூல் இல்ல, உங்களோட டிஜிட்டல் மேனேஜர்! நேரம் ஒரு தங்கம்… அதை வைரம் ஆக்குவது மோஷன்