Motion AI.. இது வெறும் டூல் இல்ல, உங்களோட டிஜிட்டல் மேனேஜர்! நேரம் ஒரு தங்கம்… அதை வைரம் ஆக்குவது மோஷன்

 

Motion AI

AI தொழில்நுட்பம் அறிமுகமான பிறகு, மனிதர்களின் கடின உழைப்பு என்பது அறிவார்ந்த உழைப்பாக மாறி வருகிறது. முன்னதாக வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் செய்த கடினமான வேலைகளை, இன்று ஒரு சில நிமிடங்களில் முடித்துவிட முடிகிறது. இது வேலையை குறைப்பது மட்டுமின்றி, மனிதர்களுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சையும் அளிக்கிறது. அந்த வகையில், உற்பத்தி திறனில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் Motion எனும் AI கருவி, அலுவலக பணிகளை எளிதாக்குவதில் ஒரு சிறந்த உதவியாளராக உருவெடுத்துள்ளது.


Motion என்பது தனிநபர்கள் தொடங்கி ஆயிரக்கணக்கான பணியாளர்களைக் கொண்ட பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு விரிவான AI பிளாட்பார்ம் ஆகும். இது ஒரு மேலாளரை போல செயல்பட்டு, உங்கள் வேலைகளை தானாகவே வரிசைப்படுத்துகிறது. எதை முதலில் செய்ய வேண்டும், எதை சற்று தாமதமாக செய்யலாம் என்பதை இதுவே முடிவு செய்வதால், பயனர் எவ்வித குழப்பமுமின்றி தனது பணிகளைத் தொடங்க முடிகிறது.


ப்ராஜெக்டுகளை உருவாக்குவதில் Motion வியக்கத்தக்க வேகத்தை கொண்டுள்ளது. ஒரு சில நிமிடங்களில் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி, அதன் ஒவ்வொரு கட்ட முன்னேற்றத்தையும் இது தானாகவே கண்காணிக்கிறது. மேலும், உங்களுக்கான மீட்டிங்குகளை தானாகவே அட்டவணைப்படுத்தி, உங்கள் முழு நாளையும் கச்சிதமாக திட்டமிட்டுத் தருகிறது. இதன் மூலம் ‘நேரத்தை எப்படி ஒதுக்குவது?’ என்ற கவலை பயனர்களுக்கு நீங்குகிறது.


அலுவலக மீட்டிங்குகளில் பேசப்படும் முக்கியமான விஷயங்களை துல்லியமாக குறித்து வைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை இது நினைவூட்டுகிறது. அதுமட்டுமின்றி, அலுவலக ஆவணங்களை எழுதுவது, அவற்றில் உள்ள பிழைகளை திருத்துவது மற்றும் உங்களுக்கு தேவையான தகவல்களை நொடியில் தேடி கண்டுபிடிப்பது என ஒரு தனிப்பட்ட உதவியாளர் செய்யும் அனைத்து வேலைகளையும் இந்த Motion AI செவ்வனே செய்கிறது.


தேவையற்ற மின்னஞ்சல்கள் மற்றும் நீண்ட நேர மீட்டிங்குகளை குறைப்பதன் மூலம், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நேரத்தை இது மிச்சப்படுத்துகிறது. சாதாரண மற்றும் ஒரே மாதிரியான வேலைகளை Motion AIயிடம் ஒப்படைத்துவிட்டு, நாம் முக்கியமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்தலாம். பல மனிதர்கள் சேர்ந்து செய்யும் வேலையைத் தனி ஆளாக செய்ய வைக்கும் இந்த Motion AI அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு நிஜமான வரப்பிரசாதமாகும்.


ElevenLabs AI : இனி சினிமாவில் டப்பிங் கலைஞர்கள் தேவையில்லை.. AI எல்லாத்தையும் ElevenLabs AI பாத்துகிடும்..