ElevenLabs AI : இனி சினிமாவில் டப்பிங் கலைஞர்கள் தேவையில்லை.. AI எல்லாத்தையும் ElevenLabs AI பாத்துகிடும்..

 

ElevenLabs AI

AI தொழில்நுட்பம் மனித குலத்திற்கு வரமா அல்லது சாபமா என்ற விவாதம் ஒரு பக்கம் உலகளவில் நடந்துகொண்டே இருக்கிறது. இருப்பினும், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை யாராலும் மறுக்க முடியாது. பல மனிதர்கள் சேர்ந்து பல மணிநேரம் செய்யும் வேலையை, AI கருவிகள் ஒரு சில நிமிடங்களில் முடித்துவிடுகின்றன. இதனால், நவீன உலகில் AI என்பது தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக மாறி வருகிறது.


இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக, குரல் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது ‘ElevenLabs’ என்ற கருவி. இது நாம் கொடுக்கும் Textகளை, அப்படியே எதார்த்தமான பேச்சாக மாற்றும் ஒரு அதிநவீன கருவியாகும். மற்ற AI கருவிகளை போல இது வெறும் ரோபோட்டிக் குரலாக இல்லாமல், ஒரு மனிதனை போலவே உணர்ச்சிகரமான ஏற்ற இறக்கங்கள் மற்றும் சரியான இடைவெளிகளுடன் பேசும் தனித்துவமான திறனை கொண்டுள்ளது.


யூடியூப் வீடியோ உருவாக்குபவர்கள், பாட்காஸ்ட் நடத்துபவர்கள், கேம் டெவலப்பர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு இந்த AI கருவி ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். குறிப்பாக சினிமா துறையில், டப்பிங் கலைஞர்கள் இல்லாமலேயே உயர்தரமான ஆடியோவை இதன் மூலம் பெற முடியும் என்பது ஆச்சரியமான விஷயம். இதன் மூலம் நேரமும், உழைப்பும் பெருமளவில் மிச்சப்படுத்தப்படுவதால், பல நிறுவனங்கள் இப்போதே இதனை பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.


உங்களுக்கு தேவையான குரல் எப்படி இருக்க வேண்டும் என்பதை Prompt மூலம் விவரித்தால் போதும் ElevenLabs அதை அப்படியே உருவாக்கி தரும். உதாரணமாக, ஒரு குழந்தையின் குரல், இளம் பெண்ணின் மென்மையான உச்சரிப்பு அல்லது ஒரு முதியவரின் கம்பீரமான குரல் என எதனையும் நொடியில் பெறலாம். அதுமட்டுமின்றி, உங்கள் சொந்த குரலையே வெறும் 30 வினாடிகளில் நகலெடுத்து , அதனைக் கொண்டு எதை வேண்டுமானாலும் பேச வைக்க முடியும். இன்னும் துல்லியமான முடிவு தேவைப்படுபவர்கள் ‘Professional Clone’ வசதியையும் பயன்படுத்தி கொள்ளலாம்.


இதில் தமிழ் உட்பட 29-க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளதால், உலகளவில் உள்ள மக்களுடன் எளிதாகத் தொடர்பு கொள்ள முடிகிறது. இது ஒரு முழுமையான ஆடியோ எடிட்டிங் தளம் போலவே செயல்படுகிறது. வெவ்வேறு நபர்களின் குரல்களை இணைப்பது மற்றும் பெரிய ஆடியோ புத்தகங்களை உருவாக்குவது இதன் மூலம் மிகவும் எளிதானது. ரோபோட்டிக் குரல்கள் சலிப்பை தரும் நிலையில், மனித தன்மையுடன் கூடிய ஏற்ற இறக்கமான குரல்களை விரும்புவோருக்கு இதுவே சிறந்த தேர்வாகும்.


குரலின் வேகம், தொனி மற்றும் உணர்ச்சிகளை மாற்றிக் கொள்ளும் முழு கட்டுப்பாடு பயனர்களுக்கே வழங்கப்படுகிறது. சத்தம் இல்லாத தெளிவான ஆடியோ மற்றும் பின்னணி சத்தங்களை உருவாக்கவும் இது உதவுகிறது. வசதிகள் பல இருந்தாலும், இதில் ஒரு சிறிய கட்டுப்பாடு உள்ளது. மாதத்திற்கு 10,000 எழுத்துக்கள் வரை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். அதற்கு மேல் தேவைப்படும் பட்சத்தில், பயனர்கள் கட்டண சேவையை பயன்படுத்த வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Zapier Central AI: 6,000 ஆப்ஸையும் ஒரே கயித்துல கட்டுற வித்தை… இது Zapier Central காட்டுற AI வித்தை.. நீங்க சொன்னா மட்டும் போதும், இது செஞ்சு முடிக்கும்!