AI தொழில்நுட்பம் என்பது மனிதனுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து, கற்பனைக்கும் எட்டாத ஆச்சரியமான வேலைகளை மிக குறைந்த நேரத்தில் முடித்து வருகிறது. அந்த வகையில், தொழில்நுட்ப உலகில் நாம் அன்றாடம் சந்திக்கும் சவால்களுக்கு தீர்வாக அமையும் முக்கிய AI கருவிகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இன்று நாம் பார்க்க இருப்பது LALAL.AI என்ற அற்புதமான ஆடியோ கருவி. இது சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை பதிவு செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக திகழ்கிறது.
தற்போது வீடியோ மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் பலரும் இதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். யூடியூப் வீடியோக்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்காக பொது இடங்களில் வீடியோ எடுப்பவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், அந்த சூழலில் நிலவும் இரைச்சல் சத்தம் தான். வாகனங்களின் சத்தம், மக்கள் பேசும் இரைச்சல் என பல இடையூறுகளுக்கு நடுவே வீடியோ எடுக்கும்போது, நமக்கு தேவையான பேச்சை மட்டும் தனியாக பிரிப்பது என்பது இதுவரை ஒரு பெரும் போராட்டமாகவே இருந்து வந்தது.
ஆனால், இந்த LALAL.AI தொழில்நுட்பம் மிகவும் சாதுரியமாக செயல்பட்டு, நமக்கு தேவையான ஆடியோ கோப்பை மட்டும் தனியாக பிரித்து எடுத்து, மற்ற தேவையில்லாத சத்தங்கள் அனைத்தையும் சத்தமில்லாமல் நீக்கிவிடுகிறது. இதில் உள்ள மிக முக்கிய அம்சம் என்னவென்றால், பின்னணியில் உள்ள இரைச்சலை நீக்கும்போது அது ஒரிஜினல் ஆடியோவின் தரத்தை எள்ளளவும் குறைக்காது. இதன் மூலம் உங்களுக்கு தேவைப்படும் குரல் மிகவும் தெளிவாகவும், ஒரு தொழில்முறை ஆடியோ ஸ்டுடியோவில் பதிவு செய்தது போன்றும் மிக துல்லியமாக அமையும்.
ஆடியோ மற்றும் வீடியோ மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், குறிப்பாக வெளிப்புற படப்பிடிப்புகளில் வீடியோ எடுப்பவர்கள் இந்த தொழில்நுட்பத்தை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். இது அவர்களுக்கு ஆச்சரியத்தக்க முடிவுகளை தரும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி, ஆடியோ எடிட்டிங் பற்றிய தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்கள் கூட மிக எளிதாக பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மனிதனின் நேரத்தையும் உழைப்பையும் மிகப் பெரிய அளவில் மிச்சப்படுத்துகிறது.
நீங்கள் ஒரு யூடியூப் கிரியேட்டராக இருந்தாலோ அல்லது வெளிப்புறங்களில் வீடியோக்களை பதிவு செய்பவராக இருந்தாலோ, இந்த டூல்ஸை ஒருமுறை பயன்படுத்தி பாருங்கள். சுற்றுப்புற இரைச்சல் இல்லாமல் உங்கள் வீடியோக்கள் மிகவும் அசத்தலாக மாறும். ஆடியோ தரம் உயரும்போது, உங்கள் வீடியோவை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் இயல்பாகவே அதிகரிக்கும். தரம் வாய்ந்த ஆடியோவே ஒரு நல்ல வீடியோவிற்கான அடையாளம் என்பதை LALAL.AI நிரூபித்துள்ளது.
இந்த LALAL.AIஐ பயன்படுத்தி, வீடியோ உருவாக்கத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலைகளை எளிதாக்குவதே புத்திசாலித்தனம்.
