AI தொழில்நுட்பமானது ஒவ்வொரு நாளும் அசுரத்தனமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் விளைவாக, தினந்தோறும் புதிது புதிதாக AI டூல்ஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. ஒன்றை விட ஒன்று மிஞ்சும் வகையில் உருவாக்கப்படும் இத்தகைய கருவிகளில், தற்போது MailMaestro என்ற AI கருவி பெரும் கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக, தொழிலதிபர்கள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
மின்னல் வேக மின்னஞ்சல் பதில்கள்
தொழிலதிபர்களுக்கும், உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு தினமும் ஏராளமான மெயில்கள் வருவதுண்டு, அதற்கு ஒவ்வொன்றுக்கும் பதில் அளிப்பது மிகவும் சவாலான விஷயம். ஆனால், இந்த MailMaestro டூல் மூலம், உங்கள் யோசனையை ஒரே ஒரு வரியாக கொடுத்தால் போதும். அது மின்னல் வேகத்தில் மூன்று விதமான மின்னஞ்சல் Draftsகளை ஒரே நொடியில் உருவாக்கி தந்துவிடும். இது உங்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, தகவல் தொடர்பை எளிதாக்குகிறது.
முக்கிய நினைவூட்டல்கள் மற்றும் பணி மேலாண்மை
இந்த டூல் வெறும் மின்னஞ்சல்களை எழுதுவதுடன் நின்றுவிடாமல், உங்கள் மின்னஞ்சல்களில் உள்ள முக்கியமான காலக்கெடு மற்றும் பணிகளை கண்டறியும் திறன் கொண்டது. அவ்வாறு கண்டறியப்பட்ட பணிகளை தானாகவே உங்களுக்கு நினைவூட்டும் வசதியும் இதில் உள்ளது. இதனால், முக்கியமான வேலைகளை நீங்கள் மறந்துவிடும் சூழல் தவிர்க்கப்படுகிறது.
நீண்ட உரையாடல்களை சுருக்கித் தரும் வசதி
நீண்ட மின்னஞ்சல் உரையாடல்களை ஒவ்வொன்றாக படித்துப் பார்ப்பது கடினமான ஒன்று. MailMaestro இத்தகைய நீண்ட உரையாடல்களை மிக அழகாகச் சுருக்கி அவற்றில் உள்ள முக்கியமான விவரங்களை மட்டும் உங்களுக்கு தொகுத்து வழங்குகிறது. மேலும், தமிழ் உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் மின்னஞ்சல்களை எழுதவும், மொழிபெயர்க்கவும் இது பேருதவியாக இருக்கிறது.
சர்வதேச தரத்திலான பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது ‘எண்டர்பிரைஸ் கிரேடு’ என்ற பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது. GGDPR, SOC II, HIPAA போன்ற சர்வதேச பாதுகாப்பு தரங்களை பின்பற்றுவதால், உங்கள் ரகசியத் தரவுகள் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன. ஜிமெயில் மற்றும் அவுட்லுக் போன்ற அனைத்து முக்கிய மின்னஞ்சல் தளங்களுடன் இது இணைந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
