MyMap.AI பக்கம் பக்கமா Paragraphs தேவையில்லை… உங்க ஐடியாவை ஒரு மேப்-ஆ போடுங்க, உலகம் உங்க பின்னாடி வரும்! MyMap.AI இருக்க கவலை ஏன்?



ஒரு விஷயத்தை சாதாரண உரைநடையாக சொல்வதைவிட, அதனை ஒரு வரைபடமாக விளக்குவது மிகவும் எளிதானது. இது அந்த தகவலை பெறுபவர்களுக்கும் மிக விரைவாக புரியும். ChatGPT போன்ற AI கருவிகள் தகவல்களை உரையாக மட்டும் வழங்கி வரும் நிலையில், MyMap.AI அந்த தகவல்களை அழகான விளக்கப்படங்களாகவும், மைண்ட் மேப்புகளாகவும் மாற்றி தருகிறது. கோடிங் அறிவு அல்லது டிசைனிங் திறமை எதுவுமே இல்லாமல், உங்கள் ஐடியாக்களை நொடி பொழுதில் காட்சிப்படுத்த இந்த கருவி உதவுகிறது.


காட்சி ரீதியான கற்றலின் வரப்பிரசாதம்


தகவல்களை படித்து புரிந்து கொள்வதை விட, ஒரு வரைபடமாக பார்ப்பது மூளையில் ஆழமாக பதியும். Visual Thinkers எனப்படும் காட்சி ரீதியாக சிந்திப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். கூகுள் அல்லது பிங் தேடல் முடிவுகளை கொண்டு, நிகழ்நேர தகவல்களுடன் கூடிய வரைபடங்களை இது உருவாக்குகிறது. இதனால் நீங்கள் தேடும் தகவல்கள் எப்போதும் அப்டேட்டட் ஆக இருக்கும்.


கோப்புகளை வரைபடங்களாக மாற்றும் திறன்


உங்களிடம் உள்ள PDF அல்லது Word கோப்புகளை இதில் பதிவேற்றினால், அதில் உள்ள சிக்கலான கருத்துகளை பகுப்பாய்வு செய்து தானாகவே மைண்ட் மேப்புகளாக இது மாற்றி கொடுக்கும். அதேபோல், ஒரு இணையதள URL கொடுத்தால் போதும்; அந்த தளத்தில் உள்ள முக்கிய தகவல்களை மட்டும் பிரித்தெடுத்து வரைபடமாக்கி, உங்களுக்கு எளிதில் புரிய வைக்க முயற்சிக்கும்.


மாணவர்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பயன்படும் விதம்


மாணவர்கள் கடினமான பாடங்களை நீண்ட கட்டுரைகளாக படிப்பதை விட, மைண்ட் மேப்புகளாக மாற்றி படித்தால் தேர்வு காலங்களில் திருப்புதல் செய்ய எளிதாக இருக்கும். அதேபோல், ஒரு நிறுவனத்தின் திட்டங்களை ஃப்ளோசார்ட்டுகளாக மாற்றி, குழுவினரிடமோ அல்லது வாடிக்கையாளர்களிடமோ பகிர்வது தொழில்முறை தன்மையை அதிகரிக்கும். வீடியோ ஸ்கிரிப்ட் அல்லது சமூக ஊடக திட்டங்களை ஒரு காட்சி அவுட்லைனாகவும் இதில் உருவாக்கலாம்.


நேர்த்தியான பிரசன்டேஷன் வசதி


PowerPoint போலவே இதில் பிரசன்டேஷன் மோடு உள்ளது என்பது ஒரு கூடுதல் வசதி. உங்கள் ஐடியாக்களை ஒரு 2D வரைபடத்தில் நேர்த்தியாக மற்றவர்களுக்கு விளக்கலாம். இது சாதாரண ஸ்லைடுகளை பார்ப்பதை விட பார்வையாளர்களை எளிதில் கவரும். சிக்கலான விஷயங்களை கூட மிகவும் தெளிவாகவும் ஊடாடும் வகையிலும் இதில் காட்சிப்படுத்த முடியும்.


எளிதான சேமிப்பு மற்றும் பகிர்தல்


நீங்கள் உருவாக்கிய வரைபடங்களை PNG அல்லது PDF கோப்புகளாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது ஒரு Link மூலமாக உங்கள் சக ஊழியர்களுக்கு உடனடி பார்வைக்கு அனுப்பும் வசதியும் உண்டு. மொத்தத்தில், ஒரு விஷயத்தை உரைநடையாக தெரிவிப்பதை விட, MyMap AI மூலம் வரைபடமாக மாற்றி தெரிவிப்பது உங்கள் கருத்து பலரையும் சென்றடைய உதவும் என்பதில் சந்தேகமில்லை.


Granola AI : மீட்டிங்ல நீங்க Points எடுக்க வேண்டாம், Participate பண்ணுங்க! மீதி வேலையை Granola AI பாத்துக்கும்… சில நிமிடங்களில் உங்கள் கையில் Full Reports..!