Gumloop AI: கோடிங் தெரியலைன்னு கவலைப்படாதீங்க… Gumloop இருக்கு, கவலையை விடுங்க! நீங்க நினைக்கிற ஒர்க்ஃப்ளோவை இனி ஒரு டிராக் அண்ட் டிராப்-ல முடிச்சிடலாம்!

 




வளர்ந்து வரும் டெக்னாலஜி உலகில் AI கருவிகள் குறித்து நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. எந்தெந்த துறைகளுக்கு எந்தெந்த கருவிகள் உதவும் என்பதை உணர்ந்து, நமக்கு ஏற்ற சரியான ஒரு கருவியை பயன்படுத்தினால் மட்டுமே நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்த முடியும். அந்த வகையில், Gumloop AI என்பது கோடிங் எழுத தெரியாதவர்கள் கூட மிகவும் சிக்கலான வேலைகளை எளிதில் செய்ய உதவும் ஒரு புரட்சிகரமான தளமாகும். இது Zapier மற்றும் ChatGPT ஆகிய இரண்டையும் இணைத்தது போன்ற ஒரு தளமாக இயங்குகிறது.


எளிமையான செயல்பாடும் ஒருகிணைப்பும்


நமது தரவுகள், செயலிகள் மற்றும் ஏஐ மாடல்களை ஒன்றிணைத்து ஒரு எளிய Drag and Drop முறை மூலம் அன்றாட வேலைகளை செய்ய இது உதவுகிறது. எந்தவிதமான புரோகிராமிங் மற்றும் கோடிங் அறிவும் இல்லாமலேயே, Nodesகளை இழுத்து வைத்து இணைப்பதன் மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆட்டோமேஷன் வேலைகளை உருவாக்கலாம். மேலும் கூகுள் டிரைவ், சேல்ஸ்போர்ஸ், ஸ்லாக் மற்றும் ஜிமெயில் போன்ற நூற்றுக்கணக்கான செயலிகளுடன் இதனை நேரடியாக இணைக்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.


புத்திசாலித்தனமான ஏஐ மாடல்கள்


ஒரு வேலையின் அடுத்த கட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை Gumloop AI புத்திசாலித்தனமாக முடிவு செய்யும் வசதி இதில் உள்ளது. OpenAI, Claude, Gemini மற்றும் DeepSeek போன்ற உலகின் முன்னணி ஏஐ மாடல்களை ஒரே இடத்தில் பயன்படுத்த முடியும். ஒரு தானியங்கி வேலையை உருவாக்க முதலில் உங்களுக்கு தேவையான செயலியை உதாரணமாக Google Sheets இதில் இணைக்க வேண்டும். இரண்டாவதாக தரவுகளை பகுப்பாய்வு செய்ய தேவையான ஏஐ செயல்பாட்டை இணைக்க வேண்டும். இறுதியாக ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் அந்த வேலையை தானாக இயங்க செய்யலாம்.


பல்வேறு துறைகளில் கம்லூப் ஏஐ-யின் பங்கு


சமூக வலைதள கருத்துகளை பகுப்பாய்வு செய்து தானாகவே பதில் அனுப்புதல் மற்றும் பிளாக் பதிவுகளை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். புதிய வாடிக்கையாளர் விவரங்களை சேகரிப்பது மற்றும் அவர்களுக்கு தகுந்த மின்னஞ்சல்களை அனுப்புவது ஆகியவற்றை இது தானாகவே செய்கிறது. அதேபோல் இணையதளங்களில் இருந்து குறிப்பிட்ட தகவல்களை தேடி எடுத்து அவற்றை அட்டவணையாக மாற்றுவதும், PDF கோப்புகளில் இருந்து முக்கியமான தகவல்களை பிரித்தெடுத்து வகைப்படுத்துவதும் இதில் சாத்தியம்.


பாதுகாப்பு மற்றும் சந்தா விபரங்கள்


இதில் உள்ள பாதுகாப்பு தன்மை மிகவும் நம்பகமானது. GDPR போன்ற சர்வதேச பாதுகாப்பு தரங்களைப் பின்பற்றுவதால் உங்கள் தரவுகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். கட்டண முறையை பொறுத்தவரை, மாதம் 2,000 கிரெடிட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதற்கு மேல் பயன்படுத்த வேண்டும் என்றால் தனிநபர்களுக்கு மாதத்திற்கு 37 டாலர்களும், ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுபவர்களுக்கு 244 டாலர்களும் சந்தா கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மின்னஞ்சல் மேலாண்மையில் புரட்சி


இந்த தளம் மின்னஞ்சல்களை பிரித்து, அதன் தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை துல்லியமாக பிரித்தெடுக்கும் தன்மை கொண்டது. ஜிபிடி-4 அல்லது கிளாட் மாடல்களை பயன்படுத்தி, பெறப்பட்ட மின்னஞ்சல் புகாரா அல்லது கோரிக்கையா என்பதை Gumloop AI முடிவு செய்யும். ஏதேனும் புகார் என்றால் உடனடியாக ‘ஸ்லாக்’ மூலம் மேலாளருக்கு தகவல் அனுப்பும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை மனிதர்கள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. வாடிக்கையாளர்களின் கேள்விகள் சரியான துறைக்கு சில நொடிகளில் அனுப்பப்படுவதால், அலுவலக நேரத்தை தாண்டியும் ஏஐ உங்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றும்.


Replit AI : முன்பெல்லாம் ஒரு App செய்ய சில வாரம் ஆகும்… ஆனா இப்போ Prompt கொடுத்தா அடுத்த நிமிஷமே App ரெடி.. இது Replit AI செய்யுற மேஜிக்!”