கையில மொபைல் இருந்தா மட்டும் போதாது... எடிட்டிங்ல CapCut இருந்தாதான் நீ கெத்து! கட் பண்றது ஈசி... ஆனா கரெக்டா கட் பண்றதுதான் மாஸ். அதுக்கு ஒரே சாய்ஸ் இதுதான்..!

 

capcut ai

இன்றைய சமூக வலைதள உலகில், வீடியோக்கள் தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றன. ஒரு சாதாரண வீடியோவை வைரல் வீடியோவாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து வித்தைகளையும் உள்ளடக்கிய ஒரு செயலி தான் CapCut. ByteDance நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த செயலி, மொபைல் மற்றும் டெஸ்க்டாப் இரண்டிலும் எடிட்டிங் அனுபவத்தை எளிமையாக்கியுள்ளது.

அடிப்படை எடிட்டிங் வசதிகள்

தொடக்க நிலை பயனர்களுக்கு ஏற்றவாறு மிக எளிமையான கருவிகளை CapCut வழங்குகிறது.

கட் மற்றும் மெர்ஜ்: வீடியோக்களைத் தேவையான இடங்களில் வெட்டவும், பல கிளிப்களை ஒன்றாக இணைக்கவும் இது உதவுகிறது.

வேகக் கட்டுப்பாடு: வீடியோவின் வேகத்தை 0.1x முதல் 100x வரை மாற்றிக்கொள்ளலாம். குறிப்பாக 'Speed Curves' மூலம் வீடியோவின் சில பகுதிகளை மட்டும் மெதுவாகவோ அல்லது வேகமாவோ மாற்ற முடியும்.

அனிமேஷன்: ஜூம் இன்/அவுட் போன்ற அசத்தலான எபெக்ட்களை மிக எளிதாகச் சேர்க்கலாம்.

தொழில்முறை எடிட்டர்களுக்கான 'புரோ' அம்சங்கள்

நீங்கள் ஒரு புரொபஷனல் எடிட்டராக மாற விரும்பினால், CapCutல் உள்ள மேம்பட்ட வசதிகள் உங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்:

Keyframe Animation: வீடியோவின் ஒவ்வொரு நொடியையும் உங்கள் விருப்பப்படி அசைக்க  இந்த அம்சம் பயன்படுகிறது.

Chroma Key: வீடியோவின் பின்னணியில் இருக்கும் பச்சைத் திரையை நீக்கிவிட்டு, உங்களுக்குப் பிடித்தமான இடங்களை பின்னணியாக மாற்றலாம்.

Optical Flow: மிக மென்மையான Smooth Slow-mo வீடியோக்களை உருவாக்க இது சிறந்தது.

Stabilization: கேமரா ஆடியிருந்தால் கவலைப்பட வேண்டாம், இதில் உள்ள ஸ்டெபிலைசேஷன் அம்சம் வீடியோவை நிலையானதாக மாற்றும்.

AI தொழில்நுட்பம்

CapCut தற்போது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல வேலைகளைச் சுலபமாக்குகிறது:

Auto Captions: நீங்கள் பேசுவதை அப்படியே தானாகவே சப்டைட்டில்களாக (Subtitles) மாற்றிவிடும்.

Background Removal: ஒரே கிளிக்கில் வீடியோவின் பின்னணியை அகற்றலாம்.

Text-to-Speech: நீங்கள் டைப் செய்யும் வாசகங்களை பல குரல்களில் ஒலிக்கச் செய்யலாம்.

AI Design: ஒரு சிறு குறிப்பை (Prompt) கொடுத்தால், அதற்கேற்ற போஸ்டர்களை உருவாக்கி தரும்.

டிரெண்டிங் எஃபெக்ட்ஸ் மற்றும் இசை

வாரந்தோறும் அப்டேட் செய்யப்படும் நூற்றுக்கணக்கான ஃபில்டர்கள் மற்றும் எஃபெக்ட்கள் (Glitch, Blur, 3D Zoom) இதில் உள்ளன. பதிப்புரிமை சிக்கல் இல்லாத மில்லியன் கணக்கான பாடல்கள் மற்றும் சவுண்ட் எஃபெக்ட்களை நேரடியாகவே உங்கள் வீடியோவில் சேர்த்துக் கொள்ளலாம்.

6. ஏற்றுமதி மற்றும் தரம் 

உங்கள் படைப்புகளை 4K 60fps தரத்தில் எக்ஸ்போர்ட் செய்ய முடியும். Smart HDR வசதி மூலம் வீடியோவின் வண்ணங்கள் மிகத் தெளிவாக இருக்கும். எடிட்டிங் முடிந்தவுடன் ஒரே கிளிக்கில் டிக்டாக் அல்லது யூடியூப்பில் பதிவேற்றலாம்.

கேமரா தேவையில்லை... லொகேஷன் தேவையில்லை... Sora 2 ஒன்று போதும்.. உன் கற்பனை உலகிற்கே பரவும்..