சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த ஓபன்ஏஐ நிறுவனம், தனது அதிநவீன வீடியோ உருவாக்க கருவியான Sora 2-வை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் உரையை மட்டும் கொண்டு, மிகத் துல்லியமான மற்றும் தத்ரூபமான வீடியோக்களை உருவாக்கும் திறன் இதற்கு உண்டு.
கற்பனைக்கு உயிர் கொடுக்கும் தொழில்நுட்பம்
சாதாரணமான ஒரு வரியை கொடுத்தால் போதும், அதை அப்படியே ஒரு சினிமா காட்சி போலவோ அல்லது அனிமேஷன் படம் போலவோ சோரா 2 மாற்றி காட்டுகிறது. இதில் Hyper-real motion மற்றும் துல்லியமான பின்னணி ஒலிகள் சேர்க்கப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு புகைப்படத்தை அப்லோட் செய்து, அதை ஒரு கதையாகவும் விரிவுபடுத்தலாம்.
உங்களே நட்சத்திரமாக மாற்றும் 'Characters' அம்சம்
இதன் சிறப்பம்சமே Characters ஆப்ஷன் தான். இதில் பயனர்கள் தங்களையோ அல்லது நண்பர்களையோ வீடியோவில் ஒரு கதாபாத்திரமாக மாற்ற முடியும். உங்கள் தோற்றம் எப்படி இருக்க வேண்டும், எப்போது தோன்ற வேண்டும் என்பதை நீங்களே கட்டுப்படுத்தலாம்.
ஆடியோ மற்றும் ரீமிக்ஸ் வசதிகள்
வீடியோக்களுக்கு தேவையான இசை, உரையாடல்கள் மற்றும் சவுண்ட் எஃபெக்ட்ஸ் தானாகவே இதில் உருவாக்கப்படுகின்றன. மற்றவர்கள் உருவாக்கிய வீடியோவை எடுத்து, அதில் உங்கள் ஸ்டைலுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யும் 'Remix' வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், இனி எவரும் ஒரு இயக்குநராக மாற முடியும்!
