Palette.ai: புகைப்படங்கள் கறுப்பு-வெள்ளையா இருக்கலாம்... ஆனா நினைவுகள் என்னைக்குமே கலர்ஃபுல் தான்! அந்த நினைவுகளுக்கு உயிர் கொடுக்கிறது தான் இந்த Palette.ai!

palette ai

நமது முன்னோர்களின் புகைப்படங்கள் அல்லது வரலாற்று சிறப்புமிக்க தருணங்கள் பெரும்பாலும் கறுப்பு-வெள்ளை நிறத்திலேயே இருக்கும். அந்த புகைப்படங்களில் உள்ள மனிதர்கள் அன்று என்ன நிறத்தில் ஆடை அணிந்திருந்தார்கள், அந்த சூழல் எவ்வளவு வண்ணமயமாக இருந்திருக்கும் என்பதை பார்க்க வேண்டும் என்பது பலரின் ஆசை. இந்த ஆசையை நிறைவேற்ற வந்துள்ளதுதான் Palette.ai என்ற அதிநவீன AI கருவி.

Palette.ai என்றால் என்ன?

இது ஒரு மேம்பட்ட AI Colorization கருவியாகும். வெறும் ஒரு நொடியில், உங்கள் கறுப்பு-வெள்ளை புகைப்படங்களுக்கு மிக யதார்த்தமான வண்ணங்களை தீட்டும் திறன் கொண்டது. உலகிலேயே மிக துல்லியமான கலரைசர் என்று பல நிபுணர்களால் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்:

21-க்கும் மேற்பட்ட வண்ண ஃபில்டர்கள்: ஒரே புகைப்படத்திற்கு பலவிதமான கலர் டோன்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

யதார்த்தமான ஒளியமைப்பு: மற்ற மென்பொருட்கள் போல வெறும் வண்ணத்தை பூசாமல், இயற்கை ஒளிக்கு ஏற்ப நிழல்களையும் வெளிச்சத்தையும் இது கையாள்கிறது.

எளிமையான பயன்பாடு: போட்டோஷாப் போன்ற சிக்கலான மென்பொருட்கள் தேவையில்லை. புகைப்படத்தை பதிவேற்றினால் போதும், அதுவே தானாக வேலை செய்யும்.

தனிப்பயனாக்கம் : AI கொடுத்த வண்ணங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், குறிப்பிட்ட 'Keywords' மூலம் வண்ணங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றலாம்.

பயன்படுத்தும் முறை:

Palette.ai இணையதளத்திற்குச் சென்று உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றவும்.

திரையில் தோன்றும் பல வண்ண ஃபில்டர்களில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்கவும்.

ஒரு நொடியில் மாற்றப்பட்ட வண்ண புகைப்படத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விலை விவரங்கள்:

இதில் இலவசமாகப் புகைப்படங்களை வண்ணமயமாக மாற்றி பார்த்து கொள்ளலாம். ஆனால், High Resolution கொண்ட புகைப்படங்களை வாட்டர்மார்க் இல்லாமல் பதிவிறக்கம் செய்ய கிரெடிட்கள் தேவைப்படும். ஆண்டு சந்தா அல்லது ஒருமுறை பணம் செலுத்தும் திட்டங்கள் இதில் உள்ளன.

Chatbase AI: தூங்காத வாடிக்கையாளர் சேவை வேணுமா? அப்போ Chatbase-ஐ களம் இறக்குங்க! 24 மணி நேரமும் உங்க பிசினஸ் மாஸா வேலை செய்யும்!