மந்திரவாதிங்க கையில தான் மேஜிக் இருக்கும்னு நினைச்சீங்களா? இனிமே Pika AI வச்சிருக்க ஒவ்வொருத்தனும் மேஜிக் மேன் தான்...

pika ai


தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, வெறும் உரையை அல்லது புகைப்படத்தை உயர்தர வீடியோக்களாக மாற்றும் ஆச்சரியத்தக்க ஆற்றலை Pika AI வழங்குகிறது. 2023-ல் தொடங்கப்பட்ட இந்த தளம், இன்று உலகளவில் வீடியோ படைப்பாளிகளின் விருப்பமான தேர்வாக மாறியுள்ளது.

Pika AI என்றால் என்ன?

Pika AI என்பது ஒரு சக்திவாய்ந்த AI வீடியோ ஜெனரேட்டர் ஆகும். இது பயனர்கள் வழங்கும் எளிய Prompts கொண்டு சினிமா தரம் வாய்ந்த அனிமேஷன் மற்றும் தத்ரூபமான வீடியோக்களை உருவாக்குகிறது. 2026-ம் ஆண்டு நிலவரப்படி, இது தனது மேம்பட்ட Pika 2.2 மாடல் மூலம் 1080p தெளிவுத்திறன் மற்றும் மிக நேர்த்தியான வீடியோ மாற்றங்களை வழங்கி வருகிறது.

முக்கிய சிறப்பம்சங்கள்

உரை மற்றும் படத்திலிருந்து வீடியோ: நீங்கள் ஒரு வரியை தட்டச்சு செய்தாலோ அல்லது ஒரு புகைப்படத்தை பதிவேற்றினாலோ, அடுத்த சில நொடிகளில் அது அசைவூட்டப்பட்ட வீடியோவாக மாறும்.

ஸ்பெஷல் எபெக்ட்ஸ்: வீடியோவில் உள்ள பொருட்களை மாற்றுதல், உருகுதல் , வெடித்தல்  மற்றும் நசுக்குதல்  போன்ற வேடிக்கையான விளைவுகளை இதில் சேர்க்க முடியும்.

Pikaswaps: நிஜ உலக வீடியோக்களில் உள்ள ஒரு பொருளை அல்லது மனிதரை வேறொரு பொருளாகவோ அல்லது கதாபாத்திரமாகவோ நொடியில் மாற்ற இது அனுமதிக்கிறது.

Lip Sync: வீடியோவில் உள்ள கதாபாத்திரங்கள் நாம் வழங்கும் ஆடியோவிற்கு ஏற்ப பேசும் வசதியையும் இது வழங்குகிறது.

பயன்படுத்தும் முறை

முதலில் Pika.art அல்லது Pollo AI போன்ற தளங்களுக்கு செல்லவும்.

உங்களுக்கு தேவையான வீடியோவை பற்றி விவரிக்கவும்

உங்களிடம் புகைப்படம் இருந்தால் அதைப் பதிவேற்றி, அதற்குரிய அசைவுகளைத் தேர்ந்தெடுக்கவும்.

'Create' என்பதை கிளிக் செய்தால், உங்களின் பிரத்யேக AI வீடியோ தயார்!

கையில மொபைல் இருந்தா மட்டும் போதாது... எடிட்டிங்ல CapCut இருந்தாதான் நீ கெத்து! கட் பண்றது ஈசி... ஆனா கரெக்டா கட் பண்றதுதான் மாஸ். அதுக்கு ஒரே சாய்ஸ் இதுதான்..!