இன்றைய தொழில்நுட்ப உலகில், நாம் நினைக்கும் கற்பனைகளை நொடி பொழுதில் ஓவியமாகவும், நிழற்படமாகவும் மாற்றும் Stable Diffusion ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு 'latent text-to-image' மாடல் ஆகும். அதாவது, நீங்கள் கொடுக்கும் வெறும் எழுத்து வடிவிலான தகவல்களை தத்ரூபமான புகைப்படங்களாக மாற்றும் திறன் கொண்டது.
Stable Diffusion என்றால் என்ன?
Stable Diffusion என்பது Deep Learning முறையில் உருவாக்கப்பட்ட ஒரு AI கருவியாகும். இது மனிதர்களின் கற்பனை திறனை மேம்படுத்தவும், கலை படைப்புகளை மிக விரைவாக உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் லேட்டஸ்ட் பதிப்பான SDXL அதாவ்து Stable Diffusion XL, அதிக தரமான படங்களை உருவாக்கப் பயன்படுகிறது. இது சாதாரண கணினிகளிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
Stable Diffusion எவ்வாறு செயல்படுகிறது?
இந்த தொழில்நுட்பம் படங்களை 'latent space' எனப்படும் சுருக்கப்பட்ட வடிவில் கையாள்கிறது. முதலில் ஒரு படத்தில் Noise எனப்படும் தேவையற்ற புள்ளிகளை சேர்த்து, பின்னர் அந்த புள்ளிகளை அகற்றி, நீங்கள் கொடுத்த விளக்கத்திற்கு ஏற்றவாறு ஒரு புதிய படத்தை உருவாக்குகிறது. இந்த தொழில்நுட்பம் ஒரு நொடியில் பல மில்லியன் கணக்கீடுகளை செய்து அழகான ஓவியங்களை நமக்கு வழங்குகிறது.
வணிக ரீதியான பயன்பாடு மற்றும் பதிப்புரிமை
Stable Diffusion ஆன்லைன் மூலம் உருவாக்கப்படும் படங்கள் CC0 1.0 Universal Public Domain Dedication கீழ் வருகின்றன. அதாவது, இந்த படங்களை நீங்கள் எந்தவித பதிப்புரிமை சிக்கலும் இன்றி வணிக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பயன்படுத்தி கொள்ளலாம். ஓவியர்கள், விளம்பர நிறுவனங்கள் மற்றும்Content Creatorsகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.
சிறந்த Promptsகளை உருவாக்குவது எப்படி?
ஒரு தரமான ஏஐ படத்தை உருவாக்க, நீங்கள் கொடுக்கும் Prompts தெளிவாகவும், சுருக்கமாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, 'ஒரு சூரிய அஸ்தமனம்' என்று சொல்வதை விட, 'ஆரஞ்சு மற்றும் ஊதா நிறங்கள் கலந்த கடலோர சூரிய அஸ்தமனம், 8K தரம்' என்று குறிப்பிடுவது சிறந்த முடிவுகளை தரும். இதற்காக 9 மில்லியனுக்கும் அதிகமான 'பிராம்ட்களை' கொண்ட தரவுத்தளங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வேகம்
தற்போது அறிமுகமாகியுள்ள SDXL Turbo மாடல், ஒரே ஒரு Single Step படங்களை உருவாக்கும் திறன் கொண்டது. இது Real-time முறையில் நீங்கள் டைப் செய்யும்போதே படங்களை மாற்றி காட்டும். வரும் காலங்களில் வீடியோ உருவாக்கம், புகைப்பட திருத்தம் போன்ற இன்னும் பல அதிரடி வசதிகள் இதில் இணையவுள்ளன.
