Canve Magic Design: டிசைனிங் கத்துக்கணுமான்னு கேட்காதீங்க... கேன்வா மேஜிக் டிசைன் இருந்தா, நீங்கதான் அடுத்த கிராஃபிக்ஸ் கிங்! மத்தவங்க டெம்ப்ளேட்டை தேடுவாங்க... ஆனா மேஜிக் டிசைன் உங்களுக்காக புது உலகத்தையே உருவாக்கும்!

canva magic design

இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக ஊடக பதிவுகள், Presentations மற்றும் வீடியோக்களை உருவாக்குவது என்பது ஒரு சவாலான காரியமாக உள்ளது. இந்த சவாலை எளிதாக்க கான்வா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு அற்புதமான கருவிதான் 'மேஜிக் டிசைன்'. இது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உங்களின் கற்பனையை நொடிகளில் நிஜமாக்குகிறது.

மேஜிக் டிசைன் என்றால் என்ன?

மேஜிக் டிசைன் என்பது ஒரு AI அடிப்படையிலான டிசைன் ஜெனரேட்டர் ஆகும். இதை பயன்படுத்த உங்களுக்கு தொழில்நுட்ப அறிவோ அல்லது டிசைனிங் திறமையோ தேவையில்லை. நீங்கள் எதை உருவாக்க விரும்புகிறீர்கள் என்பதை ஒரு வரியில் Prompt மூலம் விவரித்தால் போதும் , அதுவே உங்களுக்காக பல வண்ணமயமான மற்றும் நேர்த்தியான டிசைன்களை உருவாக்கி தரும்.

இதன் முக்கிய அம்சங்கள்:

விளக்கத்திலிருந்து டிசைன்: நீங்கள் பதிவிடும் ஒரு சிறிய வாசகத்தை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற தலைப்பு, பாணி மற்றும் படங்களுடன் கூடிய டெம்ப்ளேட்களை இது உருவாக்கும்.

மேஜிக் பிரசன்டேஷன்: ஒரு தலைப்பை கொடுத்தால் போதும், அந்த தலைப்பிற்கான அவுட்லைன், ஸ்லைடுகள் மற்றும் உள்ளடக்கத்தை இதுவே சில நொடிகளில் தயார் செய்துவிடும்.

வீடியோ எடிட்டிங்: உங்கள் கையில் உள்ள புகைப்படங்கள் மற்றும் கிளிப்களை இணைத்து, அதற்குப் பொருத்தமான இசையுடன் கூடிய குறுகிய வீடியோக்களை இது தானாகவே உருவாக்கித் தரும்.

பிராண்ட் கிட்: உங்கள் நிறுவனத்தின் லோகோ, நிறங்கள் மற்றும் Fonts ஒரே கிளிக்கில் அனைத்து டிசைன்களிலும் இதைப் பயன்படுத்திப் பொருத்த முடியும்.

இது யாருக்கெல்லாம் பயன்படும்?

தனிப்பட்ட தேவைக்காக வாழ்த்து அட்டைகள் உருவாக்குபவர்கள் முதல், பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணிகளில் ஈடுபடுபவர்கள் வரை அனைவரும் இதைப் பயன்படுத்தலாம். குறிப்பாக, சமூக ஊடகங்களில் தினமும் பதிவுகளைப் பகிரும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.

பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை:

மேஜிக் டிசைன் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை தவிர்க்க பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன. தற்போது இது ஆங்கில மொழியில் கிடைக்கிறது, விரைவில் பிற மொழிகளிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களோட கற்பனை மட்டும் இருந்தால் போதும்.. பேனா எடுக்காமலேயே ஓவியம் வரையலாம்... இது வெறும் டெக்னாலஜி இல்லை... நம் கனவுகளை நிஜமாக்குற மாயக்கண்ணாடி!