டிஜிட்டல் கலை மற்றும் டிசைனிங் துறையில் இன்று AI ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், படைப்பாற்றல் மிக்க கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருப்பதுதான் Leonardo.Ai. இது வெறும் படங்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், வீடியோக்கள் மற்றும் 3டி மாடல்களையும் உருவாக்கும் திறனை பெற்றுள்ளது.
Leonardo.Ai-யின் சிறப்பம்சங்கள்:
உயர்தரப் படங்கள் : நீங்கள் கொடுக்கும் ஒரு வரி Prompt வைத்து, மிக துல்லியமான மற்றும் கலைநயம் மிக்க படங்களை இது உருவாக்கி தருகிறது.
வீடியோ உருவாக்கம் : நிலையான புகைப்படங்களுக்கு உயிர் கொடுத்து, அவற்றை அசையும் வீடியோக்களாக மாற்றும் வசதி இதில் உள்ளது.
இமேஜ் எடிட்டிங் : ஒரு படத்தின் பின்னணியை நீக்குவது , படத்தின் தரத்தை உயர்த்துவது போன்ற வேலைகளை மிக எளிதாக செய்யலாம்.
சொந்த மாடல்களை பயிற்றுவித்தல்: உங்களது குறிப்பிட்ட பாணிக்கு ஏற்ப ஏஐ மாடல்களை நீங்களே பயிற்றுவித்து, தொடர்ச்சியான ஒரே மாதிரியான கலைப்படைப்புகளை உருவாக்க முடியும்.
இது யாருக்கெல்லாம் பயன்படும்?
லியோனார்டோ ஏஐ-யை கிராஃபிக் டிசைனர்கள், விளம்பரதாரர்கள், அனிமேட்டர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் என அனைவரும் பயன்படுத்தலாம். குறிப்பாக, கேம் டெவலப்பர்களுக்குத் தேவையான கதாபாத்திரங்கள் மற்றும் சூழல்களை உருவாக்க இது மிகச் சிறந்த கருவியாகும்.
பாதுகாப்பு மற்றும் தரம்:
இந்தத் தளம் SOC 2 அங்கீகாரம் பெற்றது, அதாவது பயனர்களின் தரவு மற்றும் பாதுகாப்பு மிக உயர்ந்த தரத்தில் பராமரிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான படைப்பாளிகளால் பயன்படுத்தப்படும் இந்தத் தளம், வணிக ரீதியாகவும் மிகப்பெரிய நிறுவனங்களால் நம்பப்படுகிறது.
