Texta AI: கூகுள்ல தேடுனா நீங்க முன்னாடி வரலாம்... ஆனா AI-கிட்ட கேட்டா உங்க பேருதான் முதல்ல வரணும், அதுக்குத்தான் இந்த Texta!மார்க்கெட்டிங் உலகத்துல இது புது ரூட்டு... AI விசிபிலிட்டில நாமதான் இனி ஹெட் அவுட்டு!

texta ai

இன்றைய டிஜிட்டல் உலகில், கூகுள் போன்ற தேடுபொறிகளை விட AI சாட்பாட்கள் அதாவது ChatGPT, Gemini, Periscope போன்றவை வழங்கும் பதில்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. உங்கள் நிறுவனம் அல்லது பிராண்ட் இந்த AI பதில்களில் இடம்பெறுகிறதா என்பதை தெரிந்துகொள்வது அவசியம். அதை எளிமையாக்க உருவாக்கப்பட்டது தான் Texta.

Texta-வின் முக்கிய அம்சங்கள்:

AI விசிபிலிட்டி கண்காணிப்பு: AI பதில்களில் உங்கள் பிராண்ட் எத்தனை முறை குறிப்பிடப்படுகிறது, அதன் தரம் என்ன என்பதை நிகழ்நேரத்தில் இது காட்டுகிறது.

போட்டியாளர் ஆய்வு: உங்கள் போட்டியாளர்களை AI எப்படி சித்தரிக்கிறது, அவர்களை விட நீங்கள் முன்னணியில் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இது விளக்குகிறது.

மூல ஆதாரங்களின் பகுப்பாய்வு : AI உங்கள் பிராண்டை பற்றி பேச எந்த தளங்களை தரவுகளாக எடுத்துக் கொள்கிறது என்பதை கண்டறிந்து, அந்த தளங்களை மேம்படுத்த உதவுகிறது.

புத்திசாலித்தனமான ஆலோசனைகள்: வெறும் தரவுகளை மட்டும் தராமல், உங்கள் பிராண்டின் செல்வாக்கை உயர்த்த அடுத்து நீங்கள் எடுக்க வேண்டிய 'Next Action' என்ன என்பதையும் பரிந்துரைக்கிறது.

ஏன் Texta-வை தேர்வு செய்ய வேண்டும்?

இந்த தளம் நிறுவனங்களின் உற்பத்தி திறனை 300% வரையிலும், AI தேடல் முடிவுகளில் அவர்களின் தெரிவுநிலையை 250% வரையிலும் உயர்த்துகிறது. இதன் எளிமையான வடிவமைப்பு , தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்களும் எளிதில் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

நீங்கள் ஒரு சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனமாக இருந்தாலும் அல்லது பெரிய கார்ப்பரேட் நிறுவனமாக இருந்தாலும், உங்கள் தேவைக்கேற்ப பல்வேறு சந்தா திட்டங்களை Texta வழங்குகிறது.

AI Lawyer: வழக்குன்னு வந்துட்டா வக்கீல் கிட்ட போவோம்... ஆனா அந்த வக்கீலே இனி AI Lawyer கிட்ட தான் போவாரு.. சட்டம் ஒரு இருட்டறைன்னு சொன்னாங்க... ஆனா அந்த அறைக்குள்ள வெளிச்சம் போட வந்திருக்கு இந்த AI Lawyer!