Mind Luster AI: பணக்காரன் மட்டும்தான் படிக்கணும்னு நினைச்ச சிஸ்டத்தை உடைச்சு... படிக்கணும்னு ஆசைப்படுற எல்லாரும் சாதிக்கலாம்னு வந்திருக்கான்டா இந்த Mind Luster..கோடி கோடியா கொட்டி குடுத்தாலும் கிடைக்காத அறிவை, ஒரே கிளிக்கில் கொடுக்குறான்..!

mindluster ai


 இன்றைய போட்டி நிறைந்த வேலைவாய்ப்பு உலகில், சுய திறமைகளை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. பல லட்ச ரூபாய் செலவு செய்து படிக்க வேண்டிய உயர்தர கல்வியை, முற்றிலும் இலவசமாக, அதுவும் இலவச சான்றிதழ்களுடன் வழங்கி உலக அளவில் சாதனை படைத்து வருகிறது Mind Luster கல்வி தளம்.

உலகளவில் மிகப்பெரிய கல்வித் தளம் 

உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கும், வேலை தேடும் இளைஞர்களுக்கும் ஒரு மாபெரும் டிஜிட்டல் பல்கலைக்கழகமாக மைண்ட் லஸ்டர் செயல்படுகிறது. இத்தளத்தில் 3,00,000-க்கும் மேற்பட்ட ஆன்லைன் படிப்புகளும் MOOCs எனப்படும் திறந்தவெளி இணையவழி பாடங்களும் ஒரே இடத்தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பலதரப்பட்ட கல்விப் பிரிவுகள் :

அனைத்து துறையினருக்கும் ஏற்றவாறு பிரம்மாண்டமான பாடப்பிரிவுகள் இங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளன:

புரோகிராமிங் மற்றும் கணினி அறிவியல்: 7,700-க்கும் மேற்பட்ட படிப்புகளுடன் Programming & Computer Science துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. Python, வெப் டிசைனிங் போன்ற கோர்ஸ்கள் இதில் அடங்கும்.

கிராஃபிக் டிசைன் மற்றும் போட்டோகிராபி: Photoshop, Sketchup Pro போன்ற கிரியேட்டிவ் துறைகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் வணிகம்: 2026-ஆம் ஆண்டின் தற்போதைய சந்தை நிலவரத்திற்கு ஏற்ப யூடியூப் குரோத் ஸ்ட்ரேட்டஜி, எஸ்சிஓ , லீட் ஜெனரேஷன் போன்ற நவீன சந்தைப்படுத்தல் நுட்பங்கள்.

மொழிகள் மற்றும் மென்திறன்கள் : ஆங்கிலம் பேசும் பயிற்சி, கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மற்றும் பல்வேறு உலக நாட்டு மொழிகளைக் கற்கும் வசதி.

CV Creator மற்றும் புத்தக சுருக்கங்கள்:

இத்தளம் வெறும் படிப்புகளை தருவதோடு நின்றுவிடாமல், வேலைவாய்ப்புக்கு தேவையான தொழில்முறை ரெஸ்யூம்களை  இலவசமாக உருவாக்கும் கருவியையும் கொண்டுள்ளது. இதனை பிடிஎஃப் வடிவத்திலோ அல்லது நேரடி லிங்க் மூலமாகவோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிர, Sapiens, Getting Things Done போன்ற உலக புகழ்பெற்ற புத்தகங்களின் சுருக்கங்களும் இங்கு வாசிக்க கிடைக்கின்றன.

சுருக்கமாக சொன்னால், 2026-ல் வீட்டில் இருந்தபடியே தங்கள் திறமையை மேம்படுத்தி, கார்ப்பரேட் நிறுவனங்களில் நல்ல வேலை தேட விரும்பும் ஒவ்வொருவருக்கும் 'மைண்ட் லஸ்டர்' ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.

Easy Peasy AI: ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ஏஐனு தேடிக்கிட்டு இருந்த காலம்லாம் மலை ஏறிப்போச்சு... எல்லா ஏஐ மாடல்களையும் தன் விரல் நுனியில வச்சிருக்கான் இந்த Easy Peasy AI..இனிமே வேலை தங்கு தடையின்றி பறக்கும்!