Icon Generator AI : ஒரு சின்ன ஐகானை வாங்குறதுக்கு டிசைனர்கள் பின்னாடி அலைஞ்சு, பட்ஜெட்டை காலி பண்ற காலம் முடிஞ்சு போச்சு... இனி வெறும் 'டெக்ஸ்ட்' கொடுத்தா போதும், Icon Generator AI அசுரன் மாதிரி லோகோக்களை அள்ளி தரும்!

icon generator ai

இன்றைய மொபைல் ஆப் மற்றும் இணையதள உருவாக்க துறையில், பிராண்டுகளுக்கான ஐகான்கள் மற்றும் லோகோக்களை வடிவமைப்பது என்பது அதிக நேரமும் பணமும் செலவிட வேண்டிய ஒரு முக்கிய பணியாகும். இதற்காக ஒரு டிசைனரை வேலைக்கு அமர்த்தி, பலமுறை திருத்தங்கள் செய்து முடிப்பதற்கு நாட்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த சவாலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சாதாரண மனிதர்களும் தங்களுக்கு தேவையான ஐகான்களை நொடிகளில் உருவாக்கும் வண்ணம் 'Icon Generator AI' என்ற அதிநவீன தளம் அறிமுகமாகியுள்ளது.

வடிவமைப்புத் திறன் தேவையில்லை: மூன்றே படிகளில் மேஜிக்!

உங்களுக்கு கிராஃபிக் டிசைனிங் குறித்த எந்தவொரு ஆரம்பக்கட்ட அறிவு அல்லது திறமை இல்லையென்றாலும், இந்த AI தளம் மூலமாக மிக நேர்த்தியான ஐகான்களை உங்களால் உருவாக்க முடியும். இதோ அதன் எளிய மூன்று வழிமுறைகள்:

உங்கள் பிராண்ட் அல்லது ஆபிற்கு தேவையான ஐகான் குறித்த கற்பனையை சாதாரண பொது மொழியில் உள்ளிட வேண்டும்.

தளத்தில் உள்ள 7 விதமான ஐகான் வகைகள் (App Icon, UI Icon, Illustration போன்றவை), 50-க்கும் மேற்பட்ட தனித்துவமான ஸ்டைல்கள் மற்றும் 30 கலர் பிரீசெட்களில் இருந்து உங்களுக்குப் பிடித்ததை தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்த சில நொடிகளில் AI உங்களுக்கான ஐகான்களை உருவாக்கி தந்துவிடும். அதனை 1024×1024 உயர்தர PNG வடிவில் உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உலகளவில் 2 லட்சத்திற்கும் அதிகமான படைப்பாளர்களால் நம்பப்படும் இந்த தளம், டிசைனர்களுக்கான செலவை குறைப்பது மட்டுமின்றி பல தனித்துவமான அம்சங்களையும் வழங்குகிறது:

இங்கு உருவாக்கப்படும் அனைத்து ஐகான்களையும் எவ்வித காப்புரிமை சிக்கலும் இன்றி வணிக ரீதியாக பயன்படுத்தி கொள்ளலாம்.

நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு ஐகானும் உங்கள் கணக்கின் ஹிஸ்டரியில் சேமிக்கப்படும் என்பதால், லோக்கல் ஃபைல்களை தேடி அலைய வேண்டியதில்லை.

மற்ற தளங்களை போல ஏமாற்று கட்டணங்கள் இன்றி, நீங்கள் வாங்கும் கிரெடிட்டுகள் எப்போதும் காலாவதியாகாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Icon Generator AI : ஒரு சின்ன ஐகானை வாங்குறதுக்கு டிசைனர்கள் பின்னாடி அலைஞ்சு, பட்ஜெட்டை காலி பண்ற காலம் முடிஞ்சு போச்சு... இனி வெறும் 'டெக்ஸ்ட்' கொடுத்தா போதும், Icon Generator AI அசுரன் மாதிரி லோகோக்களை அள்ளி தரும்!