Talk to Books AI : இனிமே புத்தகத்த புரட்டி பதில் தேட வேணாம்... புத்தகத்துக்கிட்டயே பேசி பதில வாங்கலாம்! இது கூகுளோட Talk to Books AI மேஜிக்!"

talk to books


புத்தகங்கள் அறிவின் கருவூலங்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட தகவலைத் தேட ஆயிரக்கணக்கான பக்கங்களை நாம் புரட்ட வேண்டியிருக்கும். இந்தப் சிரமத்தைக் குறைத்து, புத்தகங்களையே உங்களுடன் உரையாட வைக்கும் ஒரு பரிசோதனை முயற்சியைத் தான் Google AI)மேற்கொண்டுள்ளது. அதுதான் 'Talk to Books'.

இது எப்படிச் செயல்படுகிறது? 

பொதுவாக நாம் கூகுளில் தேடும்போது 'Keywords' எனப்படும் முக்கியச் சொற்களை வைத்துத் தேடுவோம். ஆனால், 'Talk to Books' முற்றிலும் மாறுபட்டது. இது Semantic Experiences என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குகிறது. அதாவது, நீங்கள் கேட்கும் கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதற்குப் பொருத்தமான பதில்கள் எந்தப் புத்தகத்தில், எந்தப் பக்கத்தில் இருக்கிறது என்பதை இது கண்டறியும். நீங்கள் ஒரு மனிதரிடம் பேசுவது போலவே இதனிடம் கேள்வி கேட்கலாம் அல்லது ஒரு கருத்தைச் சொல்லலாம்.

1,00,000 புத்தகங்களின் அறிவுப் பெட்டகம்

கூகுளின் இந்தத் தேடுபொறியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு கேள்வி கேட்டால், இந்த ஏஐ அந்த ஒரு லட்சம் புத்தகங்களையும் நொடிப் பொழுதில் அலசி, மிகச் சரியான 'Conversational Response' எங்குள்ளது என்பதை உங்களுக்குத் திரையில் காட்டும்.

புதிய வசதி: வகைப்படுத்துதல் 

தற்போது இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதியின் மூலம், நீங்கள் தேடும் பதில்களை வகைப்படுத்த முடியும். உதாரணமாக, அறிவியல், வரலாறு அல்லது நாவல்கள் என உங்களுக்குத் தேவையான பிரிவைத் தேர்ந்தெடுத்து, அதிலிருந்து மட்டும் பதில்களைப் பெறலாம். இது மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

உருவாக்கிய குழு 

இந்த திட்டத்தை Ray Kurzweil தலைமையிலான கூகுள் ஏஐ குழு உருவாக்கியுள்ளது. ஆரோன் பிலிப்ஸ், அமீன் அகமது மற்றும் பல மென்பொருள் வல்லுநர்கள் இணைந்து இந்தச் சிக்கலான மொழியியல் தொழில்நுட்பத்தைச் சாத்தியப்படுத்தியுள்ளனர்.

Imglarger AI: படம் மங்கலா இருந்தா என்ன? எடிட்டிங் சிங்கமா இருந்தா தரம் தானா உயரும்! Imglarger இருக்க கவலை ஏன்?