ViralityAI : டிரெண்ட் என்னன்னு நீங்க தேடாதீங்க... உங்களை வச்சே ஒரு டிரெண்ட்டை ViralityAI உருவாக்கி தரும்! யூகிச்சு கன்டென்ட் பண்ணாதீங்க... ஜெயிச்ச கன்டென்ட்டை மட்டும் கையில் எடுங்க!

virality ai


இன்றைய டிஜிட்டல் உலகில் கன்டென்ட் கிரியேட்டர்களின் மிகப்பெரிய சவாலே, மக்கள் எதை விரும்புவார்கள் என்பதை கண்டறிவதுதான். பல மணிநேரம் சமூக வலைத்தளங்களில் தேடியும் சரியான ஐடியா கிடைக்காமல் திணறுபவர்களுக்காகவே ViralityAI உருவாக்கப்பட்டுள்ளது. இது வெறும் இரண்டு கிளிக்குகளில், ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட மற்றும் வைரலான கன்டென்ட் ஐடியாக்களை உங்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் எதை உருவாக்கினால் மக்கள் மத்தியில் பிரபலமாகும் என்பதை யூகிப்பதை நிறுத்திவிட்டு, உண்மையில் எது வேலை செய்யும் என்பதை அறிந்து உருவாக்க தொடங்கலாம்.

முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்

ViralityAI ஒரு சக்திவாய்ந்த தளம் என்பதற்கு அதன் பயனாளர்களின் எண்ணிக்கையே சான்று:

1,50,000-க்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் இந்த தளத்தை  பயன்படுத்துகின்றனர். 1,00,000-க்கும் அதிகமான ஆக்டிவ் கிரியேட்டர்கள் உள்ளனர். ராசரியாக 2 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் தேடல் முடிவுகளை வழங்குகிறது.இதுவரை 1.2 மில்லியனுக்கும் அதிகமான கன்டென்ட் ஐடியாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 5-க்கு 4.9 என்ற மிகச்சிறந்த ரேட்டிங்கை இது பெற்றுள்ளது.

ViralityAI எவ்வாறு மற்ற கருவிகளிலிருந்து வேறுபடுகிறது?

சாதாரண கருவிகள் ஹேஷ்டேக்குகளையும் சுயவிவரங்களையும் மட்டுமே மேலோட்டமாக ஆராயும். ஆனால், வைரலாகும் பல பதிவுகளில் ஹேஷ்டேக்குகளே இருப்பதில்லை என்பதுதான் உண்மை. ViralityAI அதனை தாண்டி சென்று:

Keyword Search மூலம் டிரெண்டிங் தலைப்புகளை கண்டறிய உதவுகிறது. Viral Hooks மற்றும் ஐடியாக்களை வழங்கி வீடியோக்களின் ஈர்ப்பை அதிகரிக்கிறது. போட்டியாளர்களின் பட்டியல் மற்றும் பயனர் கன்டென்ட் தேடல் மூலம் மற்றவர்கள் எதைச் செய்கிறார்கள் என்பதை பகுப்பாய்வு செய்கிறது.

விலை மற்றும் திட்டங்கள்: உங்களுடைய தேவைக்கு ஏற்ப இரண்டு விதமான திட்டங்களை ViralityAI வழங்குகிறது: இலவசத் திட்டத்தில் மாதம் 100 தேடல்கள், நாளொன்றுக்கு 5 சுயவிவரத் தேடல்கள் மற்றும் தரவுத்தளத்திலிருந்து 4 வைரல் ஐடியாக்களைப் பெறலாம். புரோ திட்டத்தில் மாதத்திற்கு $5.99 (ஆண்டுத் திட்டத்தில் 40% தள்ளுபடி) விலையில் கிடைக்கிறது. இதில் வரம்பற்ற தேடல்கள், போட்டோ மற்றும் வீடியோ பில்டர்கள், அதிக லைக்ஸ் மற்றும் வியூஸ் பெற்ற கன்டென்ட்களைக் கண்டறியும் வசதி ஆகியவை உள்ளன.

Blackbox AI: கோடிங் பண்றது மட்டும் கெத்து இல்ல... அத AI வச்சு கமிட் பண்றதுதான் மாஸ்! அதுக்கு தான் இருக்கவே இருக்குது Blackbox AI..!