Scribe AI: டேட்டா செக்யூரிட்டினா சும்மா ஏனோ தானோன்னு நினைச்சியா? முப்பது நாள்ல டேட்டாவை க்ளீன் பண்ணிட்டு, உன் மாடலுக்கு ட்ரெய்னிங் எடுக்க என் டேட்டாவைத் தரமாட்டேன்னு கெத்தா சொல்றதுதான்டா உண்மையான செக்யூரிட்டி... அதுதான் ScribeAI..

scribe ai


இன்றைய வேகமான கார்ப்பரேட் உலகில், ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டு வழிமுறைகளை ), பயிற்சி கையேடுகளை மற்றும் வழிகாட்டிகளை உருவாக்குவது என்பது மிக கடினமான மற்றும் அதிக நேரம் எடுக்கக்கூடிய ஒரு வேலையாகும். ஸ்கிரீன்ஷாட்களை ஒவ்வொன்றாக எடுத்து, அதை வேர்ட் ஃபைல் அல்லது பவர்பாயிண்ட்டில் ஒட்டி, விளக்குவதற்குள் பல நாட்களாகிவிடும். இந்த சிக்கலுக்கு AI தொழில்நுட்பத்தின் மூலம் மிக எளிமையான தீர்வை தருகிறது Scribe மென்பொருள்.

நொடிகளில் வழிகாட்டிகள் 

Scribe மென்பொருளின் மிக முக்கியமான சிறப்பம்சமே அதன் வேகம் தான். நீங்கள் ஒரு வேலையை கணினியில் செய்யும்போது, அதை அப்படியே பின்புலத்தில் கவனித்து தானாகவே ஸ்கிரீன்ஷாட்களுடன் கூடிய வழிகாட்டியாக மாற்றிவிடும். இதற்காக நீங்கள் தனியாக எதையும் எழுத வேண்டிய அவசியமில்லை. ஒரே கிளிக்கில் முழு விளக்கத்தையும், சுருக்கத்தையும் இந்த Scribe AI மென்பொருள் உருவாக்கித் தந்துவிடும். இதனால் பல மணிநேர வேலை வெறும் சில நிமிடங்களில் முடிந்துவிடுகிறது.

எளிதான புதுப்பித்தல் முறை 

ஒரு நிறுவனத்தில் மென்பொருளோ அல்லது வேலை செய்யும் முறையோ மாறும்போது, பழைய வழிகாட்டிகளை மாற்றுவது பெரும் தலைவலியாக இருக்கும். ஆனால், ஸ்க்ரைப் மென்பொருளில் அசல் வழிகாட்டியை நீங்கள் ஒருமுறை புதுப்பித்தால் போதும்; அது Embed செய்யப்பட்ட அல்லது லிங்க் செய்யப்பட்ட பிற இடங்களிலும் தானாகவே நொடியில் அப்டேட் ஆகிவிடும்.

முழுமையான கட்டுப்பாடு உங்களிடமே 

Scribe AI தொழில்நுட்பம் ஆவணங்களை உருவாக்கினாலும், அதில் என்ன இருக்க வேண்டும் என்ற இறுதி முடிவு உங்களுடையதுதான். முக்கியமான நிபுணர் குறிப்புகளை நீங்களே சேர்க்கலாம், தேவையற்ற படங்களை எடிட் செய்யலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, நிறுவனத்தின் ரகசியத் தகவல்கள் வெளியில் தெரியாதவாறு மறைக்கும் வசதியும் இதில் உள்ளது.

பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் 

Scribe நிறுவனம் பயனர் தரவுகளின் பாதுகாப்பிற்கு மிக உயர்ந்த முக்கியத்துவத்தை வழங்குகிறது.

தரவு பாதுகாப்பு: மூன்றாம் தரப்பு AI வழங்குநர்கள் மூலம் இயக்கப்படும் இந்த மென்பொருள், உங்கள் தரவுகளை ஒருபோதும் தங்களின் மாடல்களுக்குப் பயிற்சியளிக்க பயன்படுத்துவதில்லை.

நீண்ட கால சேமிப்பு இல்லை: பாதுகாப்புக் காரணங்களுக்காக, செயலாக்கப்பட்ட பயனர் தரவுகள் அனைத்தும் 30 நாட்களுக்குள் முற்றிலும் நீக்கப்பட்டுவிடும்.

கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள்: (Data Encryption, பேக்அப் போன்ற சர்வதேச தரத்திலான பாதுகாப்பு அம்சங்களை இது கொண்டுள்ளது.

யாருக்கெல்லாம் இது பயன்படும்? 

இந்த மென்பொருள் பல்வேறு துறைகளுக்கும், பயன்பாடுகளுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது:

செயல்பாடுகள்: நிறுவனத்தின் எஸ்பிஓ-க்களை மிகத் துல்லியமாக உருவாக்கலாம்.

ஐடி மற்றும் மென்பொருள் : புதிய சாஃப்ட்வேர்களை நிறுவனத்தில் அறிமுகப்படுத்தும்போது ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுகிறது.

மனித வளம் மற்றும் எல்&டி: புதிதாக வேலைக்குச் சேரும் ஊழியர்களை  எளிதாகப் பழக்கப்படுத்தலாம்.

Krisp AI: பேக்ரவுண்ட்ல நாய் குரைக்கலாம், வண்டி சத்தம் கேட்கலாம், ஏன் புயலே கூட அடிக்கலாம்... ஆனா மைக் முன்னாடி நின்னு இந்த Krisp AI ஆன் ஆச்சுன்னா, அங்கே உன்னோட கெத்தான சிங்க குரல் மட்டும்தான் கேட்கும்! தட் இஸ் நம்பர் ஒன் நாய்ஸ் கேன்சலேஷன்!"