AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் கருவிகள் இன்று நம்மை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றன; இவை மனித குலத்தின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஐடி துறையினர் என பலரும் இதை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வேலையை எளிதாக்க புரட்சிகரமான கருவிகள் வந்துள்ளன.
முன்பெல்லாம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது, மாணவர்கள் எதையும் விட்டுவிடக்கூடாது என்று உன்னிப்பாக கவனித்து கை வலிக்க நோட்ஸ் எடுக்க வேண்டியிருந்தது; ஒரு சின்ன பாயிண்ட்டை தவறவிட்டால் கூட அதை மீண்டும் ஞாபகப்படுத்துவது பெரிய போராட்டமாக இருக்கும். ஆனால், இப்போதுள்ள AI டூல்ஸ்கள் ஆசிரியர் பேசுவதை அப்படியே துல்லியமான உரையாக மாற்றி தருவதால், மாணவர்கள் குறிப்பு எடுக்கும் கவலையே இல்லாமல் பாடத்தை கவனிப்பதில் மட்டும் முழு கவனம் செலுத்த முடிகிறது.
Otter.ai மாணவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி, பாடங்களை மிக எளிதாக புரிந்துகொள்ளவும், அவற்றை முறையாக அடுக்கி வைக்கவும் ஒரு டிஜிட்டல் உதவியாளராகவே செயல்படுகிறது. இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் மாணவர்களின் கற்கும் முறையையே மாற்றி, அவர்களை ஒரு ஸ்மார்ட் லேர்னராக மாற்றியுள்ளது.
Otter.ai என்பது அடிப்படையில் ஒரு Voice-to-Text கருவி. ஆன்லைன் வகுப்புகளாக இருந்தாலும் சரி, அல்லது நேரடி வகுப்புகளாக இருந்தாலும் சரி, நீங்கள் கையில் நோட்டு பேனாவை எடுத்து கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை. “நாம பாட்டுக்கு பாடத்தை கவனித்து கொண்டே இருக்கலாம், ஆனா பின்னாடி ஒருத்தன் நமக்காக எல்லாத்தையும் டைப் பண்ணிட்டே இருந்தா எப்படி இருக்கும்?” அந்த வேலையைத்தான் Otter.ai செய்கிறது. இது பேசுபவர்களின் குரலை துல்லியமாக அடையாளம் கண்டு, உடனுக்குடன் எழுத்து வடிவில் மாற்றித் தருகிறது.
Otter.aiயின் ஆட்டோமேட்டட் சம்மரி’ அம்சம் மாணவர்களுக்கு பெரிதும் கை கொடுக்கிறது. வகுப்பு முடிந்த சில நிமிடங்களிலேயே, ஆசிரியர் பேசிய முக்கியமான விஷயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளை இது சுருக்கமாகப் பட்டியலிடும். இதன் மூலம் நமது பொன்னான நேரம் மிச்சமாவதுடன், முக்கியமான தகவல்களை தவறவிடும் வாய்ப்பும் குறைகிறது.
அதேபோல் Notion AI என்பது உங்கள் தகவல்களைச் சேமித்து வைக்கும் ஒரு டிஜிட்டல் மூளை. Otter.ai மூலம் பெறப்பட்ட குறிப்புகளை அப்படியே Notion தளத்திற்கு மாற்றி, அவற்றை மிக அழகாக அடுக்கி வைக்கலாம். இது ஒரு ‘ஆல்-இன்-ஒன்’ ஒர்க்பேஸ் என்பதால், ஒரே இடத்தில் உங்களது பாடக்குறிப்புகள், திட்ட அறிக்கைகள் மற்றும் அன்றாட வேலை பட்டியல்களை பராமரிக்க முடியும்.
மாணவர்களை பொறுத்தவரை, இந்த இரண்டு கருவிகளின் இணைப்பு ஒரு வரப்பிரசாதம். ஆன்லைன் லெக்சர்களை Otter.ai-ல் பதிவு செய்து, அதன் சுருக்கத்தை நோஷனில் சேமிக்கலாம். “எக்ஸாம் டைம்ல மொத்தப் புக்கையும் புரட்டாம, இந்த AI ரெடி பண்ணி வச்சிருக்க நோட்ஸை பார்த்தாலே போதும், அசால்ட்டா பாஸ் பண்ணிடலாம். மேலும், கடினமான பாடப்பகுதிகளை எளிமைப்படுத்தவும், படிக்க வேண்டிய அட்டவணையைத் தானாகவே உருவாக்கவும் நோஷன் ஏஐ உதவுகிறது.
