தொழில்நுட்ப உலகில் ஆடியோ கோப்புகளை உரையாக மாற்றுவதிலும், உரையை ஒலியாக மாற்றுவதிலும் புரட்சியை ஏற்படுத்தி வரும் Speechify, தற்போது 'Voice Typing Dictation' எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நீங்கள் Keyboardஇ பயன்படுத்தாமல், பேசுவதன் மூலமே மின்னஞ்சல்கள், கட்டுரைகள் மற்றும் ஆவணங்களை மிக வேகமாகவும் துல்லியமாகவும் உருவாக்க முடியும்.
Speechify-ன் வியக்கவைக்கும் சிறப்பம்சங்கள்
1. 5 மடங்கு வேகமான தட்டச்சு:
சாதாரணமாக ஒரு மனிதன் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளை தட்டச்சு செய்கிறான். ஆனால், நாம் பேசும் வேகம் அதைவிட அதிகம். Speechify-ன் இந்த புதிய வசதி மூலம் நிமிடத்திற்கு 160 வார்த்தைகள் வரை எழுத முடியும். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, உற்பத்தி திறனையும் அதிகரிக்கிறது.
2. இயல்பான குரல்கள் :
Snoop Dogg, Gwyneth Paltrow போன்ற உலகப்புகழ் பெற்ற நட்சத்திரங்களின் குரல்களில் நீங்கள் ஆவணங்களை கேட்கலாம். இது ரோபோடிக் குரல் போல இல்லாமல், ஒரு மனிதன் வாசிப்பது போன்ற உணர்வைத் தரும்.
3. வாய்ஸ் ஏஐ அசிஸ்டெண்ட் :
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது ஒரு பெரிய கட்டுரையை சுருக்க வேண்டுமென்றால், இந்த ஏஐ அசிஸ்டெண்டிடம் பேசி கேட்டாலே போதும். இது நீங்கள் வாசிக்கும் உள்ளடக்கத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ப பதிலளிக்கும்.
4. அனைத்து சாதனங்களிலும் ஒருங்கினைப்பு:
iPhone, Android, Mac, Windows மற்றும் Chrome Extension என அனைத்துத் தளங்களிலும் Speechify வேலை செய்கிறது. நீங்கள் ஒரு சாதனத்தில் தொடங்கும் வேலையை மற்றொன்றில் எளிதாக தொடரலாம்.
யாருக்கெல்லாம் இது பயனுள்ளது?
மாணவர்கள்: பாடப்புத்தகங்களை ஆடியோவாக மாற்றி கேட்பதற்கும், குறிப்புகளை வாய்ஸ் டைப்பிங் மூலம் எடுக்கவும் இது பெரிதும் உதவுகிறது.
வழக்கறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்: நீண்ட பிடிஎஃப் ஆவணங்களை படிப்பதற்கும், ஆய்வு அறிக்கைகளை தயார் செய்யவும் இது ஒரு வரப்பிரசாதம்.
மாற்றுத்திறனாளிகள்: குறிப்பாக டிஸ்லெக்ஸியா மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாசிப்பதையும் எழுதுவதையும் இது எளிமையாக்குகிறது.
Speechify உங்கள் வாசிப்பு மற்றும் எழுதும் முறையையே மாற்றியமைக்கிறது. 55 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள இந்த மென்பொருள், 2026-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த ஏஐ கருவிகளில் ஒன்றாக திகழ்கிறது.
